காதலின் ஓசை
ஓசை செய்யாப் பாடல்
கேட்ட துண்டோ? -உன்
உள்மனம் காதலில்
பேச லுண்டோ?
ஓசை செய்யா அழுகை
கேட்ட துண்டோ? - கோபம்
ஒண்டிடக் காதலி
பிரிந்த துண்டோ?
ஓசை செய்யா விம்மல்
கேட்டதுண்டோ? - அவள்
ஒதுங்கியே நடந்திடப்
பார்த்த துண்டோ?
ஓசை செய்யா அருவி
கேட்டதுண்டொ?-நீயும்
ஒதுங்கிட, அவள்கண்
பார்த்ததுண்டோ?
=== ====
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
