கண்ணுக்கு தெரியும் வைரஸ்

... கண்ணுக்கு தெரியும் வைரஸ் ""...

இவர்களை தெரியுமா
நம் கண்ணுக்குத்தெரிந்த
வைரஸ் கிருமிகள் ரசித்து
ருசித்து கழிவு தின்னும்
இவர்களே பேரழிவு
ஆயிதத்தின் அங்கீகாரமுள்ள
அதிபதிகள் அறனில்லா
புறம் பார்த்து புறம் பேசும்
எலும்பில்லா நாவினூடு
நளினமாய் வளைந்தும்
குழைந்தும் வட்டமிடும்
கரிசனத்தில் ஏவரும்
கவிழ்த்திவிடும் கரையில்லாத
கடல் விதையில்லாத
மரம் தன் முகவரி
தொலைத்துவிட்டு வீதிதோறும்
வீட்டுக்குள்ளே விசத்தை
பரவவிடும் பூஞ்சைகளாய்
இருப்பதை இரண்டாக்கி
இல்லாததை முழுதாக்கி
முதுகில் அமர்ந்திருக்கும்
வேதாளமாய் வேடிக்கை
செய்து வேதனை தந்திடும்
இன்னும் பெயர் வைக்கப்படாத
பெரும் புயல் காற்று இந்த
அறமில்ல புறம் பேச்சு ,,,

புறம் பேசுவதை தவிர்த்து
நல்லறம் செய்ய முனைந்து
கரம் சேர்த்து இணைந்து
கவலைகளை களைந்து
இன்பங்களை கொடுத்து
இருக்கின்ற காலம்வரை
இனிதே வாழ்ந்திடுவோம்,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (24-Aug-14, 12:27 pm)
பார்வை : 137

மேலே