என் பெயர் தலையணை

..."" ""...

காலுக்கு முட்டுக்கொடுத்தும்
உடலோடு கட்டியணைத்தும்
உன்னோடிருப்பதும் சுகம்தான் ...

@@@@@@@@@@@@@@

உங்கள் பஞ்சணையில்
இருக்குமெனை நீங்கள்
தொட்டணைக்க என்றும்
தடையேதுமில்லை எனை
துணையாக்கும்போது நான்
துயிலுரியப்படுவதில்ல
இணை சேரும்முன்னே
என்னை சரி பார்ப்பர்
இடையில் சிறிதாய் ஊடல்
வர தடையாய் வைப்பர்
உலகறிய உன் ரகசியங்கள்
எனக்குள் அடக்கம்
சோகத்திலும் சந்தோசத்திலும்
எதிர்பார்புகளின்றி உந்தன்
கூடவே இருப்பவன் ,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (24-Aug-14, 12:25 pm)
பார்வை : 417

மேலே