என்ன தான் நிகழ்கிறதோ
எத்தனை கனவுகள் என்னுள் ,
எத்தனை மயக்கங்கள் அதனுள் ?
உடன் களித்த காலங்கள் குறைவே
உள்ளம் முழுதும் நிறைவாய் அவையே !
என்ன தான் கிடைக்குமோ இக் கண்களுக்கும்
சதா ஏக்கத்துடன் அவனையே நோக்குகின்றன
உறக்கம் வந்தால் விழி மூடினால் தான் என்னவோ ,
இறக்கம் இன்றி விழி மலர்ந்து வதைப்பதும் ஏனோ ?
உடன் நடந்ததும் ,
சந்கோஷமும் நெகிழ்வும் ,
பார்வை வழி செய்திகளும்
எத்தனை முறை தான் ஓட்டி பார்ப்பீர்களோ இவைகளை ,
சலிக்காதோ உங்களுக்கும் இந்நினைவுகளும் ?
மொழியினில் மயக்கமோ,
மயக்கமே மொழியோ ?
என்ன தான் நிகழ்கிறதோ ,
சற்றே காத்திருந்தால் தான் என்னவோ ?
யதார்த்த யோசனையின் குரல் இவ்வாரே நீல ,
மோகத்தின் மயக்கத்தில் உயிர் அணுக்களும் செவிடாக ,
இடையினில் தவிக்கும் பாமரனும் நானாக ,
விடையாம் திருமணம் நோக்கி நகர்கின்றன நாட்களுமே !