சொல்ல துடிக்குது மனசு

கண்கள் இரண்டும் கவி பாடுதே
நெஞ்சம் அதில் ஊஞ்சல் ஆடுதே
இரவின் மடியில் இளமை துள்ளுதே
பகல் விடியலில் நிழல் சாயுதே
வேப்பங்குச்சும் கரும்பாய் இனிக்குதே
காற்றோடு சேர்ந்து இதயமும் பறக்குதே....
இதை சொல்ல துடிக்குது மனசு
வெறுப்பாயோ என நினைக்கையில்
மனம் வாடுதே உன்னை நினைச்சு.......
நூறாண்டிற்கு ஒரு முறை மலரும் பூக்கொண்டு
மனதிலே செய்தேன் வண்ணப் பூக்கூண்டு...
செம்மண் புழுதி கண்ணில் பறந்து
விலகியதும் மறைந்தாய் விழிப் பார்வையிலிருந்து...
மறந்தேன் நீ போன வழி எதுவென்று
தேடக் கண்டேன் கால் சுவடொன்று...
நகர்ந்து நின்றேன் ஒரு குரல் கேட்டு
அசந்து போனேன் அது குயில் பாட்டு...
விண்ணிலே மிதந்தேன் விரல் நகம் பட்டு
உன்னிலே தொலைந்தேன் உயிரை ஊற்றிவிட்டு.....
கண்கள் இரண்டும் கவி பாடுதே.....
புன்னகையோடு சாலையில் பவனி வருகிறாய்
எனை பார்க்காது கடந்தும் போகிறாய்...
கையிலிருந்த ரோஜாவோ உதிர்ந்து போனது
உன் பார்வையால் மாலையில் ஒன்று சேர்ந்தது...
கண் பார்வை என்னை தொல்லை செய்யுது
கடல் அலையாய் சின்ன இதயத்தை மோதுது...
நெஞ்சுக்குள்ளே பஞ்சாய் காதல் பறக்குது
கண்ணு முழியில நன்றாக அது தெரியுது...
பௌர்ணமி நிலவில் மனசு இதமாய் காயுது
உன் நிழலில் சுகமாய் அது வாழுது......
கண்கள் இரண்டும் கவி பாடுதே......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
