கல்யாணத்திற்குபின் காதல் காலத்தை கடந்த காவியம் ஆகும்
"திருமண பேச்சு அடிக்கடி வந்து
விழும் போது எல்லாம் "
நீ எங்கு இருப்பாய் ?
நீ எப்படி இருப்பாய் ?
என்னை எப்போது காண்பாய் ?
எதுவும் தெரியாமல் -ஆனால்
தெரியும் உனக்காக நான்
பிறந்ததாக ...!
எத்தனை பெண்களால் காதலன்
இல்லாமல் காதலிக்க முடியும்
என்னால் இன்று முடிகிறதே
உன் நினைவில் ...!
அவசரம் இல்லை உன்னை காண
நீ இல்லாமல் உன்னை ரசிக்க என்
மனதுக்கு தெரியும் காத்திருக்க என்
இதயத்திற்கும் தெரியும் ...!
பார்க்காத காதல் உண்டு ,
பேசாத காதல் உண்டு ,
உன்னை தெரியாமலே
என் காதல் ...!
மௌனமான கற்பனைகளில் உன்னை
நினைத்து கொண்டு தான் இருக்கிறேன்
உன்னை என் அன்பில் வெல்ல வேண்டும்
என்று ...!
காதல் செய்ய வேண்டும் உன்
அறிமுகத்தின் நாள் கொண்டு
உன் இறப்பின் ஒரு நொடிக்கு
முன்பாக என் இறப்பாக ...!
காதலித்து திருமணம் செய்து
கொண்டவர்களுக்கும்
திருமணத்திற்கு பின் உன்னை
காதலிக்க போகும்
எனக்கும் உன்னகுமான அறிமுகம்
மட்டுமே குறைவாக இருக்கும் ...!
ஆனால் எத்தனை காதலுக்கு
திருமணம் இருமனம் ஒன்றாக
பெற்றோரின் அங்கிகாரம் கிடைக்கும்...!
எந்த பயமும் இல்லாமல் திரைப்படங்களுக்கு
செல்ல உன்னகும் எனக்கும் தான் அனுமதி ...!
ஊர் ஊராக உன்னுடன் தயங்காமல் சுற்ற முடியும் !
யாரும் நம்மை தவறாக சிந்திக்க தான் விடுமா நம் உறவு ...!
என் காதலும் அக்கறையும் உன்னையே
சுற்றிக்கொண்டு இருக்கும் வாழ்நாள்
முழுவதும் காதல் மனைவியாக !
சட்டென்று கற்பனைகள் விட்டு
வெளிவந்தேன் "அட லூசு "இன்னும்
உங்க வீட்டுல மாப்பிள்ளையே
பார்கல...!
வெட்கங்கள் ஒட்டி கொண்டது யாரும்
அறியாத புன்னகைகளாக ...!
(இதுனால நாம சொல்ல வர கருத்து என்னன்னா லவ் இல்லாம லைப் இல்ல சோ அந்த லவ் பெரியவக சம்மதத்தோடு நடக்கட்டுமே கல்யாணத்திற்குபின் காதல் காலத்தை கடந்த காவியம் ஆகும் )