மழைக்காதலி
!!!,,,,,மழை ,,,,,!!!
என் ஜன்னல் முன்
உன்னை கண்டாலே
தவிக்கும் சிறு குழந்தை
நான் !.
நீ இல்லாமல் ஏக்கங்கள்
உனக்காகவே காத்திருக்கும்
மயில் போல தான்
நான் !
மனதோடு வீசும் சிறு சாரல் தான்
என் புன்னகை !
என் மேல் சிந்தும் துளி எல்லாம்
என் மழை புன்னகை !
இடியோடு இசைக்கும் இசை
நடனம் தான் உன் வருகை
வான் கொண்ட நீரின்
நடனம் தான் என்னோடு !
என் வானில் மழை
வந்தாலே .....?
பனித்துளி ! மழைத்துளி !
இரண்டும் இசையமைக்கும் !
நீ .....
வரும்போதெல்லாம் - என்
மனதிற்குள்ளே விடுமுறைகள்
கல்லூரிகளுக்கு !
பலமுறை என்னை இழக்கிறேன்
நீ தீண்டும் போது எல்லாம்- எந்தன்
பெண்மையும் மென்மையும்
மலரின் மீது பட்டு விழும் மழைத்துளி !
இன்று....
நீயும் நானும்
சேரும்போதெல்லாம்
மழையும் ஒன்றாகும் காதலோடு !
""மழைக்காதலி""