பசுமை படர்

பசுமை படர் காட்டை பார்த்தீரா
பசுக்கள் மேய்வதையும்
பார்த்தீரா
பதுங்கி வந்த புலியைக் கண்டு மிரண்டீரா

கள்ளிக் காட்டுக்கு வந்தீரோ
வள்ளி என்னைக் கண்டீரோ
புள்ளி மான் ஓடும் வேளையிலே நின்றீரோ
தள்ளிப் போய் அம்பு எடுத்து குறி வைத்தீரோ

அது ஒரு கனாக் காலம்
அவை காணாமல் போனது
இக்காலம்

அன்று நிரை நிரையாக மரம் நின்று துளிர் விட்டது
இன்று திரை போட்ட மனை இருந்து அலுப்பூட்டுது

வற்றாத நீருக்கு வழி வகுக்கும்
தொற்று நோயையும் தீர்த்து வைக்கும்
காற்றைத் தூய்மை யாக்கி கொடுக்கும்
நாற்று நட்டவனை வாழ வைக்கும்

மரக்கிளையில் கூடு கட்டும் பறவைக் கூட்டம்
மரணத்துக்குப் பின் சுமந்து செல்ல குச்சி தேடுவான் மனிதர் கூட்டம்

இயற்கை அழிக்கிறான்
செயற்கையை வளர்க்கிறான்

காடு காக்கப்பட வேண்டும்
நாடு போற்றப்பட வேண்டும்

எழுதியவர் : இ.சாந்தகலா (24-Aug-14, 4:13 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kavithai
பார்வை : 102

மேலே