பசுமை நினைவுகள்
பரம்பரைத்தொழிலாம்
தந்தைக்கு
தந்தை கற்றுக்கொடுத்த
தொழிலாம்.
நிலம் பார்த்து
நீர் விட்டு விதையிட்ட
நெல்லை பயிரிட்டு
அழகு பார்த்து
அறுவடை செய்தார்களாம்
கன்னத்தில் கை வைத்துக்கொண்டு திண்ணையில்
இருந்து தாத்தா சொன்ன
கதை இது
காற்றில் பறந்து விரிந்து
கிடக்கும் சேலை போல்
பச்சை நிறத்தில்
வளர்ந்திருக்கும்
வேளாண்மையின்
அழகோ அழகாம்
கண் கொள்ளை
போகுமாம் இது பாட்டி
கூறிய கதை
இன்று அந்த இடம்
ஒரு விலை உயந்த
கட்டிடத்தைச் சுமந்து
கொண்டு இருக்க என்
தாத்தா பாட்டியோ மனதில்
பச்சை நிறம் சுமந்த
நிலத்தின் நினைவை நினைவில்
பச்சை குத்தி வைத்து வாழ்கின்றனர்