நாட்டின் மிகச்சிறந்த முட்டாள் யார்
நாட்டின் மிகச்சிறந்த முட்டாள் யார்?..
தெரிந்து கொள்ள தொடர்ந்து படிங்க...
காட்சி 01
இடம் : அரசவை
பாத்திரங்கள் : இம்சை அரசன்;, மங்குனி அமைச்சர்,அரண்மனை பல்லி
மன்னருக்கு ஒரு டவுட்டு
இம்சை அரசன்; : நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் (?) ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?
மங்குனி அமைச்சர் :ஆம் மன்னா!
இம்சை அரசன்; : அப்படியானால் உமக்கு ஒரு வேலை.. அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வாரும்... வந்து தொலையும்
மங்குனி அமைச்சர் : சரி மன்னா
இம்சை அரசன்; : கககபோ....
மங்குனி அமைச்சர் மைன்ட் வாய்ஸ் : கட்டையில போக..
காட்சி : 02
ஒரு மாதத்திற்கு பிறகு.. ஒருநாள்
இடம் : அரண்மனை அந்தபுரம்...சாரி... அரசவை
இரண்டு பேரை அழைத்து கொண்டு வருகிறார் மங்குனி அமைச்சர்..
இம்சை அரசன்: யார் இவர்கள்
மங்குனி அமைச்சர் : முட்டாள் மன்னா...
இம்சை அரசன்; : (அதிர்ச்சியுடன்) என்ன....
மங்குனி அமைச்சர் : சாரி மன்னா...இவர்கள் இருவரும் தலைசிறந்த முட்டாள்கள் மன்னா..நீங்கள் தானே அழைத்து வர சொன்னீர்கள்..
இம்சை அரசன்; : அடே.. நீ மங்குனி அமைச்சர் என்பதை மாதத்துக்கு ஒரு முறை நிரூபித்து கொண்டிருக்கிறாய்..
மங்குனி அமைச்சர் : ஏன் மன்னா...
இம்சை அரசன்; : நான் 5 பேரையல்லவா அழைத்து வர சொன்னேன்.
மங்குனி அமைச்சர் : இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்
இம்சை அரசன்; : சொல்லி தொலையும்...
மங்குனி அமைச்சர் : மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.
இம்சை அரசன்; : அடுத்து
மங்குனி அமைச்சர் : இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்.
இம்சை அரசன்; : சந்தோஷம்.. எங்கே அடுத்த முட்டாள்?
மங்குனி அமைச்சர் : அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.
இம்சை அரசன்; : சரியாக சொன்னீர்கள்.. அடுத்து..
மங்குனி அமைச்சர் : (சற்று தயங்கி) நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது...
இம்சை அரசன் : என்ன... உம்மை பிறகு பார்த்து கொள்கிறேன்.. சரி எங்கே முதலாவது முட்டாள்
மங்குனி அமைச்சர் : மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இதை பார்த்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் கொண்டிருக்கும் இவர்தான் அந்த முதல் முட்டாள்!
??????
நாங்க அப்பவேஅப்புடி.... முகப்புத்தகத்தில் முடிந்தால் லைக் பண்ணுங்க...
(இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல..சிரிப்பதற்கு மட்டுமே.. ஜார்ஜ். )