பிள்ளை வரம் வேண்டி ஒரு குமுறல்

சின்னஞ் சிறு பூவாய்
அம்மாவின் கரத்தில்
செல்லமாய் நான் இருந்த போது
உனது பூரிப்பும் , ஆனந்த சிரிப்பொலியும்
தாய்மை எனும் பேரின்பமும்
ஏன் அம்மா எனக்கு மட்டும் வாய்க்கவில்லை ,

இறைவனிடம் பிள்ளை
வரம் மட்டும்தானே நான் கேட்டேன் ,
மற்றதெல்லாம் தந்து என்னை
சொந்தங்களிடம் நோகும்படி செய்வது
ஏனோ ...பிடிக்கவில்லை

அம்மா என்ற பட்டம் பெற
அலையாத இடமும் இல்லை ,
அத்தனை வைத்தியங்களும் சாட்சியாய்
பேசும் தினம் ஒரு வேலை

பாசமிகு பிள்ளை வராதோ என்னுள்
எனை மகிழ்விக்க ,,
மலடி என்ற வன்சொல்லை உடைத்து
மழலை பேசி தீர்ப்பாயோ உளம் குதூகலிக்க ....

கணவன் பிழை இல்லை
காலம் தான் கைகூடனும்
என்பது வைத்தியர் ஆலோசனை

கருணை மிகு இறைவனின்
திருவிளையாடல் இன்னும்
முடியவில்லை என்பதே தினம் வேதனை ...

(இக்கவிதை பிள்ளை வரம் தேடி தவிக்கும் உள்ளங்களுக்கு சமர்ப்பணம் )

எழுதியவர் : ரிப்னாஸ் - தென்னிலங்கை (24-Aug-14, 7:51 pm)
பார்வை : 179

மேலே