அழகான வாழ்க்கை ஆனந்தமாய் போட்டிக்கவிதை

என் வீட்டு முற்றத்தில்
குளக்கரை நீர்
அதிக சூடின்றி அதிக குளிர்ச்சியின்றி
அதில் நீந்தும் போது
வாழ்க்கை ஆனந்தமானவை!

அல்லியை மாலையாக இட்டு
மத்தாப்பாய் சிரித்த காலம்
மண்வீடு கட்டி
வாசல்முற்றம் வைத்து
விளையாண்ட அந்த‌
வாழ்க்கை ஆனந்தமானவை!

பக்கத்து வீட்டு மாமாவின்
பயமுறுத்தும் மீசையை
நிசமா பொய்யா என்று இழுத்துப்பார்த்து
செல்லத் திட்டு வாங்கிய‌
வாழ்க்கை ஆனந்தமானவை!

ஆசைப்படுவோம்
பேராசைப்படாமல்
வாழ்க்கை ஆனந்தமானவை!

கோபமும் பொறாமையும்
விட்டொழிந்தால்
வாழ்க்கை ஆனந்தமானவை!

மனதை தூய்மையாக‌
வைத்தோமானால்
வாழ்க்கை ஆனந்தமானவை!

சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன கோபங்கள்
சின்ன சின்ன காயங்கள்
என எல்லாவற்றையும் சிறியதாக
ஏற்றுக்கொண்டால்
வாழ்க்கை ஆனந்தமானவை!

துயரம் இல்லா வாழ்க்கையே இல்லை
அதையும் கடந்து சென்றோமானால்
வாழ்க்கை ஆனந்தமானவை!

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (24-Aug-14, 8:48 pm)
பார்வை : 132

மேலே