மரணமே என்னை ருசி

..."" மரணமே என்னை ருசி ""...

எதிரியும் அழகே
துரோகியும் அழிவே
அழியா நெகிழியாய்
உறவில்லா அன்பும்
உயர்வில்லா பண்பும்
வார்த்தையின் பிறப்பு
வாழ்க்கையின் நெருப்பு
கதையினின் உணர்வும்
காயத்தின் உருவகம்
நினைவுகள் இழந்து
நிலைமைகள் மறந்து
எம் விழிகளில் ஓரமாம்
வலிகளில் ஓடிடும்
கண்ணீரின் துளிகள்
கவிதையின் மொழிகள்
மெளனமாய் ஒழுகிடும்
மெழுகாய் மனதும்
காகித பணமாய்
காற்றுள்ள பிணமாய்
புண்பட்டு புழுங்கி
அழுகையில் அழுகி
வேண்டாம் வேதனை
வேடிக்கை சாதனை
மனிதனாய் இறக்க
மரணமே என்னை ருசி ,,,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (25-Aug-14, 1:28 am)
பார்வை : 99

மேலே