ஆணின் மனக்குமுறல்

தொலைந்தும் தொலையாத அடையாளங்கள்
கரைத்தாண்ட நினைக்கும் கடலைப்போல
மோதி மோதி வீழ்ந்திடும் என் கனவுகள் !

பாதம் கடந்து வந்த வழிகளை கூட
மறந்த பித்தன் போல்...!!!
பாதி வழியில் தொலைந்தவன்.

மழைகாலத்தில் கூட பாலைவனத்தில்
பொழியும் நீராக பயனற்ற வாழ்க்கை
வாழ்ந்து கொண்டு இருக்கிறேனா ???

ஆண் என்பதால் என்னவோ ...
சுமைகளும் ,கடமைகளும்
வாழ்நாள் முழுவது துரத்திக்கொண்டு
இருக்கின்றன ...!!!

படிக்கும் வயதில்
" இளமை "
தடை செய்து கொஞ்சம் திசைகளை
என்னை அறியாமல் மாற்றித்தான்
சென்றது ...!!!
காரணம் என்னை மட்டும் கூறாதீர்கள்
அதில் சமுதாயத்தின்
பங்கும் அதிகம் ...

வேலையில் கூட எதிர்பார்க்கும்
"சம்பளம் " இல்லை...
என்னை நினைத்து நானே
தவித்து கொண்டு இருக்கிறேன் !!!

சரிபரவாயில்லை
குறைகளை சொல்வதில் அர்த்தமும் இல்லை !!!

இன்று ,
என் வாழ்க்கையாவது தொடரலாம்
என்றால் ....
என் குடும்பம் என்னை நிலைத்தடுமாற செய்கிறது !!!
பிரச்சனைகளில் அதிகம் சிக்கி தவிப்பது
என்றாகி விட்டது...!!!

இறந்தும் இறவாத நிலை ,
பெண்ணாக பிறந்து இருக்கலாம் ...
வேதனைகளை கூறி அழ
அவர்களுக்கு "கண்ணீராவது"
இருக்கிறது ...
ஆண்களுக்கு அது ஒரு
கேவலமாக அல்லவா சித்தரிக்கப்படுகிறது !!!

எனக்கு பிடித்த பெண்ணை
பார்க்க கூட விருப்பம் இல்லை ...!!!
"வெறுமை"

என்
உடலில் இருக்கும் என் இதயமே
என்னை விரும்பாதபோது
இன்னொரு இதயத்தையும்
உள்ளே வைத்துக்கொள்ள
எப்படி சம்மதித்து
அமைதிக்கொள்ளும் ......???

மொத்தத்தில் ஐஸ்கிரீம் போல
கரைந்திடும் ...
"என் கனவுகள்"

எழுதியவர் : சிவசங்கரி (25-Aug-14, 11:35 am)
பார்வை : 136

மேலே