காலைப்பொழுதில் என் புதியவள் - சந்தோஷ்
![](https://eluthu.com/images/loading.gif)
சூறாவளியில் சிக்கித்தவித்த
நெருப்பு நாக்காய்
ஆர்ப்பரித்த என்னிதயத்தில்
இன்று ஒரு தென்றல்
பெயரிடப்படாத
ஒரு சுகமாய்
வருடிச்சென்று என்னை
ஆரத்தழுவிக்கொண்டது.
இந்த சுகம்
இதுவரையிலான
என் சோகத்தின்
கண்ணாடியை உடைத்தெறியுமா?
இந்த தென்றல்
என்மீதான கவலை
பிம்பத்தை மாற்றிவிடுமா ?
எத்தனை பொழுதுகளை
வலியோடும்,நிம்மதி
வழியில்லாமலும்
கடந்த அப்பாவி நான்.
இன்றைய காலைப்பொழுதில்
“அடப்பாவி” ஆனேன்.
இன்று மட்டும் ஏனோ?
”இன்னும் கொஞ்சம்
நேரம் இருந்தால்தான் என்ன?”
தனுஷ் படப்பாடல்
அடிக்கடி கேட்கிறேன்.
ஆண்மை எதுவென்று
ஆராய வேண்டாம்
என் மனமே...!
இதோ...
என்னை ரசிக்கப்போகும்
எனக்கானவளின் பெண்மையிடம்
விடை இருக்கிறது.
நாளை என்னாகுமோ?
விடைத்தெரிந்துவிட்டால்
வாழ்க்கைக்கு அர்த்தமில்லைதானே.
நாளை நடப்பது நடக்கும்
ஆம்.... ஆம்
என் புதியவளே...!
நடப்பது நடக்கும்..!
உன் செவ்விதழ்
உதிர்க்கும் சொல்லில்
என் நம்பிக்கையும்
என் வாழ்க்கையும்
மீண்டும் துளிர்க்கும்.
--------------------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.