இதழின் ஓரம்

பார்க்கும் நேரமெல்லாம் பார்வையிலே கவிதை சொன்னவள்

என்னிடம் எதோ பேச என் எதிரே வந்தாள்

கைகளைப் பிசைந்தபடி கன்னம் சிவந்தாள்

இருவரும் ஒருமுறைகூட பேசியதில்லை இருப்பினும் பலமுறை பரிமாற்றம் நடந்ததை போல் ஒரு உணர்வு

வார்த்தையினை வடிவெடுக்க முற்பட்டவள்
வாடிய மலராய் மாறினால் -ஏனோ...!

மலர் முகம் சிவக்க மண்ணை பார்த்தவள் மீண்டும் என்னை பார்த்து

இதழின் மவ்னத்தில் எதோ கூறினால்
கண் கருவிழி அசைய கண்ணிருடன்

காரணம்-கருவில் சுமந்தவள் என்
அருகில்

எழுதியவர் : த.மா.ச (25-Aug-14, 4:05 pm)
Tanglish : ithazhin oram
பார்வை : 271

மேலே