காணவில்லை வண்ணத்தில் நீ

வண்ணம் கொண்ட என்
எண்ணங்கள் முழுதும்
உன் பிம்பங்களை
மட்டும் காண்கின்றேனே..
வானவில்லின் வண்ணத்தில்
தெரியும் வண்ணங்களில்
எந்த வண்ணத்தில் நீ
ஒளிந்திருக்கிறாய் என
கலைத்திட்டு தேடினேன்
அத்தனை வண்ணங்களையும்
காணவில்லை அங்கே என
கவலை கொண்டேன்
நீ என் எண்ணங்களில்
ஒளிந்து விளையாடுவதை
தெரிந்து கொள்ளாமலே...

எழுதியவர் : உமா (26-Aug-14, 4:18 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 62

மேலே