காதல்

சித்திரை நிலவாய்
சித்திரப் பாவை
நித்திரை கலைத்தாளே - ஒரு
சத்தம் இன்றி
முத்தம் வைத்து
முத்திரை பதித்தாளே!!
கத்தை குழலோடு
நித்தம் வந்து
சித்தம் சிதைத்தாளே - காதல்
வித்தை செய்து
புத்தன் என்னை
பித்தன் ஆக்கினாளே!!!

எழுதியவர் : ஹரி (26-Aug-14, 4:20 pm)
Tanglish : kaadhal
பார்வை : 85

மேலே