சிறு புன்னகை பூவே 555
என்னவளே...
நீயும் நானும் சந்திக்கும்
வேளையில்...
மழலையை போல
புன்னகையோடு பேசுவாய்...
உன் வார்த்தையில்
ஏதேனும் பிழை என்றால்...
மென்மையாக
நாக்கை கடித்து...
ஒற்றை கண்ணை
சிமிட்டுவாய்...
அந்த நிமிடம் மழலையாகவே
தெரிவாயடி எனக்கு...
மீண்டும் உன் வார்த்தை
பிழைக்காக காத்திருகிறேனடி...
நான் ஒரு
மழலைபோலவே...
உன் வார்த்தைகளை
ரசித்தபடி...
உன் முன்னாள்.....

