ஹரி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹரி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  17-Nov-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Aug-2014
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  24

என்னைப் பற்றி...

அகத்தின் அழகை ரசிப்பதில் விருப்பம்
அழகிய தமிழை ருசிப்பதில் விருப்பம்.....

என் படைப்புகள்
ஹரி செய்திகள்
அளித்த படைப்பில் (public) Joseph மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Sep-2014 11:02 am

இன்று நாம் மனிதர்களின்
முகத்தையும் பார்ப்பதில்லை
நூல்களையும் பார்ப்பதில்லை
முகநூளில் இருக்கும் நாம்

joseph

மேலும்

மனிதர்களையும் பார்ப்பதில்லை நூல்களையும் பார்ப்பதில்லை முகநூலில் இருக்கும் நாம் ..... நல்ல கருத்து ....வாழ்த்துக்கள் 24-Sep-2014 1:55 pm
உண்மைதான் தோழமையே .. அதனால் தான், நான் இப்போதெல்லாம் முகநூல் பக்கமே செல்வதில்லை. நமது எழுத்துத் தளத்துக்கு வந்து விடுகிறேன். இத்தளம் எனக்கு பிறந்த ஊரில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. 15-Sep-2014 6:20 am
உண்மைதான் நண்பரே அருமையான கருத்துக்கள் தொடருங்கள்.... 15-Sep-2014 4:13 am
உண்மை தான் ! 14-Sep-2014 12:43 pm
ஹரி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2014 3:04 pm

செம்மண் ரோட்டில் நடந்து
புழுதிக் காற்றை சுவாசித்து
களையான கண்ணாத்தா
களையெடுக்க கிளம்பிட்டா...

தோளுல ஒரு கொழந்தையும்
வயித்தில ஒரு பிள்ளையையும்
சுமந்தபடி நடந்து வந்தா
நெஞ்செல்லாம் பாரத்தோட!!

குடிகார கணவனுக்கு
வாக்கப்பட்டா மகராசி
உழைச்சே ஓடாதேஞ்சா
இதுதானே அவராசி!!

அப்பத்தா கிழவிக்கு
ஒத்தாசை செஞ்சிபுட்டு
சிவகாமி ஆச்சிக்கு
பாத்திரத்தை தேச்சிபுட்டு
பூவாத்தா கன்னுக்கு
கழனிதண்ணி காட்டிப்புட்டு
வயலோரம் நடந்தா
அவ பொழப்ப பாக்க!!

கொண்டுவந்த சீலைய
மரத்திலே தொட்டிகட்டி
சின்னவனை படுக்க வெச்சா
தாலாட்டு பாட்டு பாடி!!

தாலாட்டு இல்ல அது
தன் சோக பாட்டு தானே
பெண்ணாக பொறந்துபு

மேலும்

அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 11-Sep-2014 11:37 pm
ஹரி - ஹரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2014 4:22 pm

மஞ்சள் பூக்கள் பாதை எங்கும்
கொஞ்சிப் பேசுதே
வஞ்சியின் கண்கள் என்னைப் பார்க்க
நெஞ்சமும் ஏங்குதே

தூரத்தில் போகின்ற மேகம்
என் மேல்
தூறல்கள் போடாதோ?
மூடிய மொட்டுக்கள்
எல்லாம் சேர்ந்து
மலராய் மாறாதோ?

வானமும் நிறம் மாறுதே
மழையும் வந்து போகுதே
வெண்ணிலா வந்த பின்னாலும்
வெறுமையாய் தோன்றுதே

சோலையில் நடந்து சென்றாலும்
ஆயிரம் பூக்கள் கண்டாலும்
உன்னையே நினைத்து என்மனம்
தனிமையில் வாடுதே

மரத்திலே ஜோடி பறவைகள்
பேசுதே காதல் மொழியினில்
மனமதை ரசிக்க வில்லையே
தேனில்லை எந்தன் பூவிலே

உறவுகள் சூழ் திருந்தாலும்
உலகமே முன் னிருந்தாலும்
உன்னையே தேடும் விழிகள்
உரைக

மேலும்

கருத்துக்கு நன்றி நண்பா....தவறுக்கு மன்னிக்கவும்..... 08-Sep-2014 10:07 am
நல்ல பதிப்பு !! ஆங்காங்கே எக்கச்சக்க பிழைகள் !! பதிக்கும் முன் படிக்கவும் ! பின் பதிக்கவும் !! வாழ்த்துக்கள் !! 05-Sep-2014 5:06 pm
ஹரி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2014 4:22 pm

மஞ்சள் பூக்கள் பாதை எங்கும்
கொஞ்சிப் பேசுதே
வஞ்சியின் கண்கள் என்னைப் பார்க்க
நெஞ்சமும் ஏங்குதே

தூரத்தில் போகின்ற மேகம்
என் மேல்
தூறல்கள் போடாதோ?
மூடிய மொட்டுக்கள்
எல்லாம் சேர்ந்து
மலராய் மாறாதோ?

வானமும் நிறம் மாறுதே
மழையும் வந்து போகுதே
வெண்ணிலா வந்த பின்னாலும்
வெறுமையாய் தோன்றுதே

சோலையில் நடந்து சென்றாலும்
ஆயிரம் பூக்கள் கண்டாலும்
உன்னையே நினைத்து என்மனம்
தனிமையில் வாடுதே

மரத்திலே ஜோடி பறவைகள்
பேசுதே காதல் மொழியினில்
மனமதை ரசிக்க வில்லையே
தேனில்லை எந்தன் பூவிலே

உறவுகள் சூழ் திருந்தாலும்
உலகமே முன் னிருந்தாலும்
உன்னையே தேடும் விழிகள்
உரைக

மேலும்

கருத்துக்கு நன்றி நண்பா....தவறுக்கு மன்னிக்கவும்..... 08-Sep-2014 10:07 am
நல்ல பதிப்பு !! ஆங்காங்கே எக்கச்சக்க பிழைகள் !! பதிக்கும் முன் படிக்கவும் ! பின் பதிக்கவும் !! வாழ்த்துக்கள் !! 05-Sep-2014 5:06 pm
ஹரி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2014 4:19 pm

பெண்ணே போகாதே நில்லு
கோபம் வேண்டாமடி
நீலம் இல்லாத வானம்
அன்பே இங்கேதடி

ஊடலும் காதலில்
இருப்பது அழகு!

ஆண்களின் கோபம்
அரைநொடி மட்டுமே
ஆயினும் அதனுள்
அர்த்தங்கள் ஆயிரம்

பெண்களின் கோபமோ
வானத்தின் நீளமே
தேடியும் அர்த்தத்தின்
சாயலும் பூஜியம்

தோன்றிய பொழுதில்
மறைந்திடும் ஆண்களின்
கோபத்தை கணக்கில்
வைப்பதே வீணடி

நடந்ததை நினைத்து
நடப்பதை விடுத்து
நிலையாக கோபத்தை - நெஞ்சத்தில்
வளர்ப்பதே நீயடி

ஆயினும் அழகியே
கோபத்தை ரசிக்கிறேன்
சிவந்திடும் கன்னத்தில்
சூரியன் பார்க்கிறேன்

கோபம் கூட அழகாய்
உன்னால் தானே தோன்றும்
உன்னைச் சேர்ந்த தாலே
தன்மே

மேலும்

ஹரி - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2014 9:51 am

ஆசிரியர் தின எண்ணம் போட்டி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று முதல் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பதிவாகும் "ஆசிரியர் தினம்" பற்றிய சிறந்த எண்ணத்திற்கு பரிசு வழங்கப்படும்.

பரிசு : ரூபாய் 100-க்கு மொபைல் டாப்-அப்

மேலும்

குழந்தைகளின் திறனை வெளிக்கொனர்பவராக அவர்களை நற் பண்பு நிறைந்தவானாக, எதிர்காலத் தலைவனாக மாற்றுபவராக அவர்களின் உழைப்பை வெளிக்கொனர்பவராக வாழ்க்கையில் தைரியம் இழந்தவனை ஊக்குவிக்கும் சக்தியாக பெரியோரை மதிக்கக் கற்றுத் தர அனைத்துக் குழந்தைகளையும் முன்னேற்றப் பாதையில் வழிவடத்தும் உதவியாளராக எவ்வித பலனும் எதிர் பாராது அவர்களின் துணை நிற்ப்பவராக படிப்பில் உதவிக்கரமாக அவர்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய அளவுக்கு அரும்பாடு பட்டு உழைக்கும் தூய உள்ளம் கொண்டவர்களே ஆசிரியர்கள் ஆசிரியராக இருந்து பார்க்கும் போது தான் அவர்களின் அருமை தெரிய வரும் நானும் ஒரு நாள் ஆசிரியராவேன் குழந்தைகளின் வாழ்க்கையை முன்னேற்ற அன்பாய் அழகாய் அருமையாய் அவர்களை நல்வழிப் படுத்த தான் மனிதன் என்று மறந்தவனை மனிதனாக்குபவனாக என் வாழ்க்கையையே அவர்களுக்கு அற்ப்பனிப்பவனாக ஆவேன் ஆசிரியராய் அளிப்பேன் எனது பங்கை என் மாணவர்களுக்காக! 04-Sep-2014 4:49 pm
மாதா, பிதா, குரு மற்றும் தெய்வம் என்று நாம் கூறுவதுண்டு....பெற்று, வளர்த்து மகனாய் மற்றும் மகளாய் உலகுக்கு அறிமுகம் செய்வது அன்னையும் தந்தையும்....ஆனால் அந்த மகனை மற்றும் மகளை ஒரு நல்ல மனிதனாக மாற்றுவது குருவாகிய ஆசிரியர்கள் தான் என்று கூறினால் அது மிகையாகாது.....அதனால் தான் குருவை தெய்வத்திற்கு முன்னே வைத்து அவர்களை பெருமை படுத்துகிறோம்......படிக்க ஆரம்பித்த பிறகு நம் வாழ்வின் பெரும் பகுதியை நாம் ஆசிரியர்களிடம் தான் செலவிடுகிறோம்....நம்மை நல் வழியில் கொண்டு சென்று நல்லவைகளை எடுத்து சொல்வதில் இருந்து நம்மை தெளிந்த நீரோடையை போல் ஓடச் செய்வது வரை ஆசிரியர்களின் பங்கு சொல்வதற்கு இல்லை... இந்த தருணத்தில் என் ஆசிரியர்கள் அனைவரையும் நினைத்துக் கொள்கிறேன்.....அவர்களின் வழி காட்டுதல் என்னை இன்று வரை நல்வழியில் தான் கொண்டு சென்றுள்ளது....இனிமேலும் கொண்டு செல்லும்......என் ஆசிரியர்கள் அனைவரையும் என் சிரம் தாழ்ந்து பணிகிறேன்!! அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் 04-Sep-2014 3:08 pm
ஆசிரியருக்கு குரு என்ற பெயரும் உண்டு! பள்ளிப் பாடங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு குரு இருப்பது போல் ஒவ்வொரு துறையிலும் அதற்கான குருக்கள் இருக்கின்றனர். குரு நம்மை விட வயதில் சிறியவராக இருந்தாலும் அவரை மரியாதையுடன் நடத்த வேண்டும். இந்தக் கருத்தில்தான் தந்தை பரமசிவனுக்கு உபதேசம் செய்த முருகப் பெருமான் 'தகப்பன் சுவாமி' என்றழைக்கப் பட்டார். ஆசிரியர்களை மரியாதையுடன் நடத்துவோம்! 03-Sep-2014 11:28 pm
நல்ல விசயம். நன்றி. 03-Sep-2014 10:14 am
ஹரி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2014 2:59 pm

பச்சை குதிரையும்
பாண்டி ஆட்டமும்
போனது எங்கே
தெரியவில்லை

பல்லாங் குழியும்
சோழி கூட்டலும்
சொல்லாமல் போனது
சரி யில்லை

கண்ணா மூச்சியும்
கபடி ஆட்டமும்
கடந்த காலமாய்
போனது ஏனோ?

வானத்தை மறைக்கும்
வண்ணமிகு பட்டங்கள்
வழி தவறியதே
விழி நனைகிறதே

சிகரத்தை அடைந்த
சிலம்பும் களரியும்
சேர்த்திட வழியின்றி
சிதறிக் கிடக்கிறதே

ஒவ்வொரு செயலிலும்
ஆயிரம் அர்த்தங்கள்
விளையாட்டின்
ஒவ்வொரு அசைவிலும்
அத்தனை பயிற்சிகள்

இது போல் பலதை
இழக்க விட்டோம் - இன்று
நம்மை நாமே
இழந்து விட்டோம்

மூடிய அறையில்
கணினி வழியே
அசைவின்றி ஆடும்
பைத்தியம் ஆனோம்

நட

மேலும்

அருமை நட்பே... தொடருங்கள்... 01-Sep-2014 7:28 pm
ஹரி - ஹரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2014 11:53 am

சுகமான காலையில்
சூரியன் வருகையில்
கண் கூசும் படியாக
கன்னித் தேர் யாரிவள்?

ஞாயிறை தோற்றடிக்கும்
ஒளிக்கீற்றைப் பார்த்தேன்
கண் கொட்ட முடியாமல்
கண்ட படி தவித்தேன்

அலைபோல நடையிட்டு
என் நெஞ்சை கொய்தாளே
அளவான அழகாலே
அல்லாடச் செய்தாளே

பூப் போன்ற புதுமைப்பெண்
யாரிவளோ நானறியேன்
அதை நானும் அறியுமுன்னே
என் மனதை நானறியேன்!!

காற்றாக உருமாறி
அவள் கேசம் கலைத்திடவா
தலை கோதும் விரலாக
இங்கே நான் மாறிடவா?

தூரத்தில் பார்த்ததற்கே
உளறல்கள் ஆயிரம்
நெருங்கி அவள் வந்துவிட்டால்
உதறல்கள் ஆரம்பம்!!

தொலைதூர பார்வைக்கே
தொலைத்துவிட்டேன் என் மனதை
கிட்டத்தில் வந்துவிட்டால்
கேட்டுரு

மேலும்

நன்றி jinna .....இரண்டாவது வரியில் தொலைத்து விட்டேன் என்று கூறியதால் நான்காவது வரியில் கேட்டுருப்பேன் என்று கூறினேன்....நன்றிகள் பல!! 27-Aug-2014 3:48 pm
அழகான கவிதை வரிகள்... "தொலைதூர பார்வைக்கே தொலைத்துவிட்டேன் என் மனதை கிட்டத்தில் வந்துவிட்டால் கேட்டுருப்பேன் என் வயதை!! " -- இதில் கேட்டுருப்பேன் என் வயதை!! என்பதற்கு பதிலாக தொலைத்திருப்பேன் என் வயதை!! என்று முடித்திருந்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... 27-Aug-2014 1:53 pm
நன்றி நண்பரே! 27-Aug-2014 12:56 pm
நன்றி!! 27-Aug-2014 12:56 pm
ஹரி - ஹரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2014 4:20 pm

சித்திரை நிலவாய்
சித்திரப் பாவை
நித்திரை கலைத்தாளே - ஒரு
சத்தம் இன்றி
முத்தம் வைத்து
முத்திரை பதித்தாளே!!
கத்தை குழலோடு
நித்தம் வந்து
சித்தம் சிதைத்தாளே - காதல்
வித்தை செய்து
புத்தன் என்னை
பித்தன் ஆக்கினாளே!!!

மேலும்

நன்றி ராஜா!! 27-Aug-2014 3:52 pm
அருமை ஹரி! 26-Aug-2014 6:31 pm
ஹரி - Rajesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2014 2:38 pm

இடுப்பு வலியில்
துடித்த துடிப்பில்
உறுப்பு வழியில்
விடுத்தெடுத்த தாயும்

வாழ்கை பயணத்தில்
கடைக்கால நேரத்தில்
சுயநல கோணத்தில்

விடுதியடைத்த சேயும் நலமாம். . .

மேலும்

ஆழமான வரிகள் அருமையோஅரூமை 02-Aug-2014 6:46 pm
மிக்க நன்றி :) 02-Aug-2014 3:34 pm
சொல்லாடல் அழகு !! வாழ்த்துக்கள் !! 02-Aug-2014 2:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
Musthak ahamed TR

Musthak ahamed TR

Akkaraipattu - Sri Lanka
சபரிநாதன்

சபரிநாதன்

பரமக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (10)

Musthak ahamed TR

Musthak ahamed TR

Akkaraipattu - Sri Lanka
ANBURAJ.C

ANBURAJ.C

Coimbatore
user photo

kavya subramaniam

TIRUCHENGODE

இவரை பின்தொடர்பவர்கள் (10)

ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

மேலே