காதலும் ஊடலும்
பெண்ணே போகாதே நில்லு
கோபம் வேண்டாமடி
நீலம் இல்லாத வானம்
அன்பே இங்கேதடி
ஊடலும் காதலில்
இருப்பது அழகு!
ஆண்களின் கோபம்
அரைநொடி மட்டுமே
ஆயினும் அதனுள்
அர்த்தங்கள் ஆயிரம்
பெண்களின் கோபமோ
வானத்தின் நீளமே
தேடியும் அர்த்தத்தின்
சாயலும் பூஜியம்
தோன்றிய பொழுதில்
மறைந்திடும் ஆண்களின்
கோபத்தை கணக்கில்
வைப்பதே வீணடி
நடந்ததை நினைத்து
நடப்பதை விடுத்து
நிலையாக கோபத்தை - நெஞ்சத்தில்
வளர்ப்பதே நீயடி
ஆயினும் அழகியே
கோபத்தை ரசிக்கிறேன்
சிவந்திடும் கன்னத்தில்
சூரியன் பார்க்கிறேன்
கோபம் கூட அழகாய்
உன்னால் தானே தோன்றும்
உன்னைச் சேர்ந்த தாலே
தன்மேல் கோபம் கொள்ளும்!
ஊடல் இல்லா காதல்
உப்பில் லாத உணவு
சுவையைக் கூட்டிப் போகும்
சுகமாய் ஆகும் வாழ்வு