காதல் மருந்து

மஞ்சள் பூக்கள் பாதை எங்கும்
கொஞ்சிப் பேசுதே
வஞ்சியின் கண்கள் என்னைப் பார்க்க
நெஞ்சமும் ஏங்குதே

தூரத்தில் போகின்ற மேகம்
என் மேல்
தூறல்கள் போடாதோ?
மூடிய மொட்டுக்கள்
எல்லாம் சேர்ந்து
மலராய் மாறாதோ?

வானமும் நிறம் மாறுதே
மழையும் வந்து போகுதே
வெண்ணிலா வந்த பின்னாலும்
வெறுமையாய் தோன்றுதே

சோலையில் நடந்து சென்றாலும்
ஆயிரம் பூக்கள் கண்டாலும்
உன்னையே நினைத்து என்மனம்
தனிமையில் வாடுதே

மரத்திலே ஜோடி பறவைகள்
பேசுதே காதல் மொழியினில்
மனமதை ரசிக்க வில்லையே
தேனில்லை எந்தன் பூவிலே

உறவுகள் சூழ் திருந்தாலும்
உலகமே முன் னிருந்தாலும்
உன்னையே தேடும் விழிகள்
உரைக்கும் ஆயிரம் மொழிகள்

எல்லாம் இருந்தும் இங்கே
ஏதோ என்னுள் இழப்பு
தனிமை நோயும் தீர்ந்திட
காதல் ஒன்றே மருந்து

எழுதியவர் : ஹரி (5-Sep-14, 4:22 pm)
Tanglish : kaadhal marunthu
பார்வை : 98

மேலே