ராஜராஜசோழன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜராஜசோழன்
இடம்:  சிங்கார சென்னை
பிறந்த தேதி :  23-Nov-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Aug-2014
பார்த்தவர்கள்:  238
புள்ளி:  31

என்னைப் பற்றி...

காதலிக்க யாருமில்லை,
கவிதை பேச நட்புமில்லை,
ஆர்வம் மிக்க பந்தமில்லை,
தாய் கூட பாராட்டவில்லை.

தனிமை தேடி ஓடி வந்தேன்
புணைப் பெயரில் பாடி வந்தேன்
தனிக்காட்டு ராஜா நான்
கவிதை பாடும் சோழன் நான்!

என் படைப்புகள்
ராஜராஜசோழன் செய்திகள்
கார்த்திகா அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Oct-2014 12:31 am

செஞ்சூரியனில் குளித்திட்ட
செங்கொன்றை பூக்களின்
இதழ் மடல்களில் என்
வெட்கச்சிவப்பு சேமித்தேன்

பனிமுத்துக்களில்
புன்னைகை சேர்த்தேன்
பார்வை பறித்திடும்
நேரமதனில் பரிசளிக்க

இலை தொடும் மலர்களாய்
அரவமற்ற நின்
ஞாபகத்தீண்டல்களில்
குதித்தோடும் காதல் அலை

யாரோ ஒருவர்
ரசனையில் நான் வாழ
எனக்கெனப் பிறந்திட்ட
உன் பிம்பம் ஏன் என்
விழிகளில் இன்னும் விழவில்லை

தகி தகிக்கும் விழிச் சூட்டை
ஆற்ற தவணை முறையிலாவது
உன் வருகை வேண்டும்

வானவில் தூவிய
நட்சத்திரப் பூச்சிதறல்களில்
நான் மட்டும் தனித்தபோது
வெள்ளை நிலவாய் எனைக்
கொள்ளையிட்டுக் கொண்டாய் நீ!!

மேலும்

வெட்கச் சிவப்பென்றால் அதிகமான வெட்கத்தினால் கன்னங்கள் சிவப்பாய் மாறுவதைக் குறிக்கும்...கருத்தில்லாமல் கவிதைகள் இல்லை .... 24-Oct-2014 11:15 pm
ஆமாம், எனக்கு அகராதியைப் பார்க்க தெரியாமல் தான் உங்கள்ட கேட்கிறன்.. நீங்க உண்மையிலேயே கவிஞரா இருந்தா என்னுடைய கேள்விக்குறிய அர்த்தத்த விளங்கி அது பதில் சொல்லுங்க... சும்மா உங்க உங்க விருப்பத்திற்கு வெட்கசிவப்பு, வெட்கபச்சை வெட்ககருப்பு என்றெல்லாம் எதுகை மோனை க்காக போட்டா கவிதையாகிருமா. கருத்தோட போட்டு இருந்தா என் கேள்விக்கு விளக்கம் சொல்லியிருப்பீங்க . 24-Oct-2014 10:19 pm
தமிழ் அகராதியைப் பாருங்க.... 24-Oct-2014 6:28 pm
வெட்கச்சிவப்பு - அப்படின்னா?? 21-Oct-2014 10:58 pm
ராஜராஜசோழன் - ராஜராஜசோழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2014 12:45 pm

புல்வெளிப் பாதையில் நடந்திடப் புற்கள்
கால்தனைக் கவர்ந்திட ஏங்குதே!

தோட்டத்தின் இனிமையைக் கொஞ்சிடுங் குயில்கள்
நெருங்கிட ரசித்திட கூவுதே!

சாலையின் ஓரத்தில் மரங்களின் தென்றல்
தாவிடத் தழுவிட வீசுதே!

அமுதமும் அளித்திடுங் கடலலை தன்னுடன்
இணைத்திட இழுத்திட பாயுதே!

புற்கள் ஏங்கிட, குயில்கள் கூவிட,
தென்றல் வீசிட, கடலலை பாய்ந்திட,
என் மகள் ஆட்டத்தை ரசித்தேனே!
இக்கவி பாடி மகிழ்ந்தேனே!

மேலும்

நன்றி தோழரே! 12-Oct-2014 11:52 pm
நன்றி நண்பரே! 12-Oct-2014 11:51 pm
நன்றி அனுசா! 12-Oct-2014 11:51 pm
பாசத்தின் அழகில் கவிதை அருமை தோழரே... 12-Oct-2014 11:33 pm
ராஜராஜசோழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2014 12:45 pm

புல்வெளிப் பாதையில் நடந்திடப் புற்கள்
கால்தனைக் கவர்ந்திட ஏங்குதே!

தோட்டத்தின் இனிமையைக் கொஞ்சிடுங் குயில்கள்
நெருங்கிட ரசித்திட கூவுதே!

சாலையின் ஓரத்தில் மரங்களின் தென்றல்
தாவிடத் தழுவிட வீசுதே!

அமுதமும் அளித்திடுங் கடலலை தன்னுடன்
இணைத்திட இழுத்திட பாயுதே!

புற்கள் ஏங்கிட, குயில்கள் கூவிட,
தென்றல் வீசிட, கடலலை பாய்ந்திட,
என் மகள் ஆட்டத்தை ரசித்தேனே!
இக்கவி பாடி மகிழ்ந்தேனே!

மேலும்

நன்றி தோழரே! 12-Oct-2014 11:52 pm
நன்றி நண்பரே! 12-Oct-2014 11:51 pm
நன்றி அனுசா! 12-Oct-2014 11:51 pm
பாசத்தின் அழகில் கவிதை அருமை தோழரே... 12-Oct-2014 11:33 pm
ராஜராஜசோழன் - ராஜராஜசோழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2014 1:01 pm

பல புள்ளியிட்டு கோலமிட்டாய், கோலமோ
ஒரு புள்ளியிட்டு நோட்டமிட்டது!
பல கூறு செய்து கனி சுவைத்தாய், கனியோ
ஒரு கூறாய் உன் உதட்டை சுவைத்தது!
சிறு விளையாட்டாய் பட்டம் விட்டாய், பட்டமோ
உனை கொண்டு செல்ல திட்டமிட்டது!
நான் காதல் கொள்ள கவிதை செய்தேன், கவிதையோ
போட்டியிட்டு உனை ரசித்தது!

மேலும்

நன்றி புனிதா! 30-Sep-2014 11:34 pm
அருமை ... 30-Sep-2014 4:47 pm
ராஜராஜசோழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2014 1:01 pm

பல புள்ளியிட்டு கோலமிட்டாய், கோலமோ
ஒரு புள்ளியிட்டு நோட்டமிட்டது!
பல கூறு செய்து கனி சுவைத்தாய், கனியோ
ஒரு கூறாய் உன் உதட்டை சுவைத்தது!
சிறு விளையாட்டாய் பட்டம் விட்டாய், பட்டமோ
உனை கொண்டு செல்ல திட்டமிட்டது!
நான் காதல் கொள்ள கவிதை செய்தேன், கவிதையோ
போட்டியிட்டு உனை ரசித்தது!

மேலும்

நன்றி புனிதா! 30-Sep-2014 11:34 pm
அருமை ... 30-Sep-2014 4:47 pm
ராஜராஜசோழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2014 10:43 am

இரவின் வரவால் உறையும் நீர்போல்
உந்தன் வரவால் உறைந்தேன்!
உதயன் கண்டால் உருகும் பனிபோல்
உன்னை கண்டால் வியர்த்தேன்!

கடலில் திசையை காட்டும் ஒளிபோல்
அருகில் வரவர துடித்தேன்!
காற்றின் விசையால் மிதக்கும் இலைபோல்
சிரிப்பின் விசையால் மிதந்தேன்!

துணிச்சல் கொண்டு காதல் சொல்ல
முகத்தில் எச்சல் உமிழ்ந்தாய்!
பதில்சொல் கேட்க "என்னுடன் வாழ
தகுதி இல்லை" என இகழ்ந்தாய்!

"அமெரிக்க வேலை, பெனாரஸ் சேலை,
மனை பின் சோலை, பிடி என் காலை!
வங்கியில் கோடி, ஊர்சுற்ற ஆடி,
வாயில் சிகார், கையில் கிடார்!"

ஒப்பற்ற ஞானத்தை உன்னிடம் கற்றபின்
பயனற்றவன் என உணர்ந்தேன் - காதல்
அருகதை இல்லையென அறிந்தேன்!

திக்

மேலும்

ராஜராஜசோழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2014 11:29 pm

விறகுகள் கீறி சிறுபொறி சுடரும்
காட்டுத்தீயோ
உன் முதல் பார்வை?

அமைதி நகரில் அழைபிதழ் இன்றி
பரவும் புயலோ
உன் முதல் பார்வை?

தெளிந்த வானில் சிறுதுளி எழும்பி
இடியுடன் மழையோ
உன் முதல் பார்வை?

வறண்ட என் உள்ளத்தில் காதல்
கவிதை ஊற்றே
உன் முதல் பார்வை!

மேலும்

நன்றி நண்பா! 31-Aug-2014 5:27 pm
நன்றி ராம் 31-Aug-2014 5:27 pm
நன்றி நாகூர் 31-Aug-2014 5:27 pm
நன்றி தோழா! 31-Aug-2014 5:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

user photo

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே