கவிதையோ, போட்டியிட்டு உனை ரசித்தது

பல புள்ளியிட்டு கோலமிட்டாய், கோலமோ
ஒரு புள்ளியிட்டு நோட்டமிட்டது!
பல கூறு செய்து கனி சுவைத்தாய், கனியோ
ஒரு கூறாய் உன் உதட்டை சுவைத்தது!
சிறு விளையாட்டாய் பட்டம் விட்டாய், பட்டமோ
உனை கொண்டு செல்ல திட்டமிட்டது!
நான் காதல் கொள்ள கவிதை செய்தேன், கவிதையோ
போட்டியிட்டு உனை ரசித்தது!

எழுதியவர் : ராஜராஜசோழன் (30-Sep-14, 1:01 pm)
பார்வை : 87

மேலே