உதடுகள் ஒட்டா கவிதை
உன்னையே எண்ணி எண்ணி
உருகியே இங்கு சாவேன்!
கன்னியே அழகு சிலையே
கருத்தினில் நிறைந்த திருவே!
என்னையே தருவேன் உனக்கு
ஏற்றுக்கொள் ,எடுத்து கொள்ளேன்
சின்னதாய் சிரித்தால் என்னில்
சிறகினை விரிக்குங் கவிதை..
அன்னையை ஒத்தாய்! அணைத்தாய்!
அறிவினைத் தந்தாய்! இனித்தாய்!
விண்ணிலே நிறைந்த நிலவாய்
விடியலில் வெளிச்சந் தந்தாய்!
கண்டிட வில்லை நானே
கவிதையின் உயிரின் வடிவை
கண்டதால் கண்டு கொண்டேன்
கன்னியுன் வடிவில் இன்றே!..