ஏங்குகின்றேன் உனக்காக
காதலிக்கின்றேன் நான் உன்னைக்
காதலிக்கின்றேன் உயிர் உள்ள வரை
காதலிப்பேன்...!!!
உருவம் இல்லாத காற்று சாட்சி
இழுத்து விடும் மூச்சுக் காற்று சாட்சி
நான் உன்னைக் காதலிக்கின்றேன்...!!
சுடும் கதிரவன் சாட்சி அவன்
முகம் பார்த்து மலரும் கமலம்
சாட்சி நான் உன்னைக்
காதலிக்கின்றேன்...!!
உதிர்ந்து கிடக்கும் நட்சத்திரம் சாட்சி
சிறுது நேரம் வந்து செல்லும் வான வில்
சாட்சி நான் உன்னைக் காதலிக்கின்றேன்...!!
கொட்டும் மழையைத் தடுத்து விட்டு
மெல்லத் தூவிச் செல்லும் பனி சாட்சி
நான் உன்னைக் காதலிக்கின்றேன்...!!
மலரோடு உறவாடும் வண்டு சாட்சி
அந்த மலரைப் பார்த்து ஏங்கும் என்
ஏக்கம் சாட்சி நான் உன்னைக்
காதலிக்கின்றேன்...!!
வெண்ணை உருக்கி எடுக்கும்
நெய் போல் நீ என்னை உருக்கி
உன் நினைவை வளர்க்கின்றாயேடா
இவைக்கு சாட்சி அன்புதானடா..!!
இத்தனை சாட்சி தேவையி ல்லை
உன் மனசாட்சியே கூருமடா நான்
உன்னைக் காதலிப்பதை... !!

