மதுரை திருக்கோவில்

கூடல் மாநகரில் நான்மாட கோபுர கட்டிட கலைவண்ணம்
சில்ப கலைவண்ணம் அழியா வர்ண சித்திர கைவண்ணம்
தென்பாண்டி நாடுடை அம்மை அப்பன் மனம் மகிழும் வண்ணம்
செந்தமிழுக்கு சான்றுரைத்த பொற்கமல தடாகம் , தமிழ்வண்ணம்
நித்தம் ஒரு திருவிழா , நான் மாட வீதியில் அற்புத திருகாட்சிகளே
சித்தம் நிற்கும் பெருவிழா , சித்திரைத் திருவிழா திருகாட்சிகளே
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய ஆலவாயான் திருக்கோவில்
உலகெலாம் உவந்து ஓம்புதற்குரிய அதிசயங்களில் ஒன்றானதே .