எனக்கான தேவதை
மெலிதான புன்னகை
சிரிப்பால் விரியும் வலை
நிஜமாய் அவள் தேவதை
எனக்கான தாரகை
விழி இரண்டும் போதாதே
அவள் அழகை நான் காண
எத்தனை மேனகிட்டிருப்பன் பிரம்மன்
என்னவளை படைத்திடவே
நடந்திடும் நடையில்
என் ஆறடி அளப்பாள்
கண்ணால் தானே
கவிதை படிப்பாள்
அவளே கவிதை இருந்தும் மறுப்பாள்
கவிஞன் அவளால் நான்
சொன்னாலும் சொல்லின் முடிவில்
முகம் மூடி சிரிப்பாள்