அழகான வாழ்க்கை ஆனந்தமாய் போட்டி கவிதை

இரவும் பகலும்
வெளிச்சத்தின் வேறுபாடு

வறட்சியும் செழுமையும்
இயற்கையின் ஏற்பாடு

உறவும் பகையும்
உணர்ச்சியின் வெளிபாடு

இன்பமும் துன்பமும்
இதயத்தின் நிலைபாடு

இளமையும் முதுமையும்
காலத்தின் கோட்பாடு

வேறுபாடுகளை உணர்ந்து
மாறுபாடுகளை மறந்து

இடர்பாடுகளை கடந்து
முரண்பாடுகளை களைந்து
உடன்பாடுகளோடு கலந்து
உறவாடினால் -
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்.

எழுதியவர் : சுகுமார் (27-Aug-14, 10:23 pm)
பார்வை : 84

மேலே