எய்தாத வேண்டார் மெய்யாய காட்சி யவர் - ஆசாரக் கோவை 89

கிட்டாதவற்றை விரும்பாமை முதலியன

எய்தாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
கைவாரா வந்த இடுக்கண் மனமழுங்கார்
மெய்யாய காட்சி யவர். 89 ஆசாரக் கோவை

பொருளுரை:

உண்மையான அறிவினை யுடையவர் தமக்குக் கிடைத்தற்கு அரியவற்றை
விரும்ப மாட்டார்.

கழிந்து போன பொருட்கள் குறித்து வருந்த மாட்டார்.

தீர்ப்பதற்கரியதாய் ஏற்பட்ட துன்பத்துக்கும் மனம் கலங்க மாட்டார்.

கருத்துரை:

கிடைத்தற் கரியவற்றை விரும்புவதும், இழந்த பொருட்களுக்கு வருந்துவதும்,
அரிய துன்பத்திற்கு மனங் கலங்குவதும் பயனற்ற செயல்களாம்.

கைவரு - அகப்படு, கை வாரா இடுக்கண் - நன்மை பயவாத இடுக்கண்.

கிட்டா தாயின் வெட்டென மற எனப் பிறர் கூறுவதும் காண்க.

இடுக்கண் : இடுங்குகண் என்பதன் மரூஉ. "கையார வந்த இடுக்கண்" என்றும் பாடம்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Aug-14, 1:11 am)
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே