பெற்றோரும் கல்வியும்

உந்தன் கால்கள் அம்மை யாக
உப்பங் கால்வா யாலுண் டாக
காய்ந்த மீனும் பெட்டிக் குள்ளே
காலால் தூரம் விட்டுத் தூரம்
சென்று கூவி கூவி விற்றாய்
தண்ணீர்ப் புட்டி தூக்கி வந்தாய்
கத்தி கொண்டு குத்தும் கீறும்
கூர்முள் நீக்கி வெட்டி மூட்டி
உட்தீ யிட்டுக் காசு பார்த்தாய்
பாத்திப் பாவ புஞ்சை பூக்க
விற்றாய் பார்த்துப் பார்த்து நீக்கி
பெற்ற காசை கற்க முக்கால்
இல்லுக் குக்கா லென்று ஈந்தாய்
கொஞ்சிப் பேசும் பிள்ளைப் பேச்சும்
அன்பும் கண்டி டாமல்
சென்றிட் டாரே சம்பா திக்கவே!