சத்தியராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சத்தியராஜ் |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 16-May-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 287 |
புள்ளி | : 16 |
கோவை, இந்துசுதான் கலை & அறிவியல் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.
அண்ணல் நோக்கும் அறியா மடந்தையே!
கண்ணும் பதியும் காமன் உருவே!
பூங்கா சென்று புதுமொழி புரியவே!
மங்கா மயங்கா மருளா காதலன்
புதுசொல் பலவும் புதுக்கிட மயங்குவாய்!
அப்பனும் விரட்டும் அசையாது நிற்கவே!
தப்பு என்று தனலாய் மிரட்டவே!
பாம்பாய் புவியில் புரண்டு புலம்பவே!
வேம்பாய் நின்றிடும் வெகுளி தோற்கவே!
அண்ணல் நோக்கும் அறியா மடந்தையே!
கண்ணும் பதியும் காமன் உருவே!
பூங்கா சென்று புதுமொழி புரியவே!
மங்கா மயங்கா மருளா காதலன்
புதுசொல் பலவும் புதுக்கிட மயங்குவாய்!
அப்பனும் விரட்டும் அசையாது நிற்கவே!
தப்பு என்று தனலாய் மிரட்டவே!
பாம்பாய் புவியில் புரண்டு புலம்பவே!
வேம்பாய் நின்றிடும் வெகுளி தோற்கவே!
கருவி கலந்திட காரமும் சேர்த்து
கருவி நெருப்பு கருக்க - கருத்தாக
உண்பாள் துடியிடை உள்ளுறுக நார்சதை
கண்நுங்கு போலாவாள் பார்! – இரு விகற்ப நேரிசை வெண்பா
மாய்க்கும் மயக்கும் மதுவாம் மணமெனின்
மாய்க்கும் மதுவாம் மகவெனின் - மாய்க்கும்
மனமும் மதுவான் மலர்ந்திட மண்டும்
மனநேர் பயிர்சூழ் களை – இரு விகற்ப நேரிசை வெண்பா
விளக்கணித் திருநாள் எதற்கு
புத்தாடை உடுத்தி
இனிப்பு வழங்கி
மகிழ்வதற் காகவா?
பட்டாசெனும் கொடியோனைக் கொளுத்தி
சுவாசத்தினை நிறுத்தி
செவியினைச் செவிடாக்கி
துன்புறுவதற் காகவா?
நராகா சுரனெனும்
தமிழன் வீழ
நகைக்கும் நயவஞ்சகன்
கொண்டாடும் நாளை
தமிழனே கொண்டாடி
மகிழ்வதற் காகவா?
சிந்தனைசெய் தமிழனே
சிந்தனைசெய் உந்தன்
திருநாள் எதுவென? உன்நலநாள் எதுவென? (கலித்தாழிசை)
விளக்கணித் திருநாள் எதற்கு
புத்தாடை உடுத்தி
இனிப்பு வழங்கி
மகிழ்வதற் காகவா?
பட்டாசெனும் கொடியோனைக் கொளுத்தி
சுவாசத்தினை நிறுத்தி
செவியினைச் செவிடாக்கி
துன்புறுவதற் காகவா?
நராகா சுரனெனும்
தமிழன் வீழ
நகைக்கும் நயவஞ்சகன்
கொண்டாடும் நாளை
தமிழனே கொண்டாடி
மகிழ்வதற் காகவா?
சிந்தனைசெய் தமிழனே
சிந்தனைசெய் உந்தன்
திருநாள் எதுவென? உன்நலநாள் எதுவென? (கலித்தாழிசை)
கண்மாய் ஓரம் நீண்ட கால்வாய்
கண்முன் தோண்ட ஊண்ட நான்கு
கம்பு ஈரெறா மடைவாய்ப் பார்த்துத்
தொங்க ஈராண் மாறி மாறி
நீரைப் பாய்ச்ச சல்சல் லென்று
நீரும் பாய நீந்தும் மீனும்
நண்டும் மின்னி மின்னிச் செல்ல
குண்டும் தாவும் மூட மூடும்
சத்தம் கேட்டு நஞ்சை தாவும்
மேவிட் டாமே நீரு றிஞ்சி
மண்ணைக் கீறும் வண்டி தோன்ற
மாந்தன் இன்னல் தீர்ந்த தாமே
பூச்சிக் கொல்லித் தூவ நல்ல
நஞ்சை நஞ்சு நஞ்சை யாக
மாற மாறி விட்ட
நல்ல மாந்த வாழ்வும் கண்டாய்!
தமிழால் இனணந்திருக்கும் தளத் தோழமைகளே....இயற்பியல் , வேதியியல் போன்ற பாடங்களை மேல்நிலை வகுப்புகளில் பயிலும் போது நம் தமிழ்வழி கல்வி சுலபமா...இல்லை ஆங்கில வழி கல்வி சுலபமா....எதை நம் இளைய தலைமுறை பின்பற்ற வேண்டுமென
நினைக்கிறீர்கள். ...காரணம் என்ன?