அறிவியலின் கொடையும் இழப்பும்

கண்மாய் ஓரம் நீண்ட கால்வாய்
கண்முன் தோண்ட ஊண்ட நான்கு
கம்பு ஈரெறா மடைவாய்ப் பார்த்துத்
தொங்க ஈராண் மாறி மாறி
நீரைப் பாய்ச்ச சல்சல் லென்று
நீரும் பாய நீந்தும் மீனும்
நண்டும் மின்னி மின்னிச் செல்ல
குண்டும் தாவும் மூட மூடும்
சத்தம் கேட்டு நஞ்சை தாவும்
மேவிட் டாமே நீரு றிஞ்சி
மண்ணைக் கீறும் வண்டி தோன்ற
மாந்தன் இன்னல் தீர்ந்த தாமே
பூச்சிக் கொல்லித் தூவ நல்ல
நஞ்சை நஞ்சு நஞ்சை யாக
மாற மாறி விட்ட
நல்ல மாந்த வாழ்வும் கண்டாய்!

எழுதியவர் : முனைவர் த. நேயக்கோ (29-Aug-14, 6:06 pm)
பார்வை : 130

மேலே