பாவத்தின் பலன்கள்
பாவத்தின் பலன்கள்
நெல்மணிகள் தந்து
பசிப்பிணி போக்கும்
வளமான மண்ணை
நீர்நிலைகளில் கரைப்பது
ஆண்டவன் கட்டளையா?
இயற்கைக்கு ஊறுசெய்ய
நம்மைத் தூண்டுவது
இறைவனின் வேலையில்லை.
இறைவனைப் புரிந்தவர்
இயற்கையைப் பேணுவார்.
இயற்கையை அழிப்பது
இறைவனுக்கே பொறுக்காது
வறட்சியின் ஆட்டமும்
வெள்ளப்பெருக்கின் வருகையும்
இயற்கையன்னைக்கு நாம்செய்யும்
பாவத்தின் பலன்களே.
இயற்கையை அழிப்பவர்
உயிரனத்தின் பகைவர்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
