சாளரப் பார்வை

சாளரம் வழியே ஞாயிறின் முதல் கீற்று நுழைகிறது

புதிய நாளெட்டின் தொடக்கத்தைக் காட்டுகிறது

அடே மனிதா எழுந்திரு துயில் போதும்

விழித்திடு வாழ்க்கை வாழ்வதற்கு

கடந்தவைகளை மறந்திடு நல்லவை போற்றிடு

இன்றே புதிய நாள் புதிய எண்ணங்களின் புலப்பாடு

விண்ணின் புலரி தானே மண்ணின் ஆற்றல்

அந்த கதிரின் நுழைவில் தான் தெரியும் தூசியின் துகள்கள்

வெறும் தூசியே அப்படி என்றால்

ஆற்றல் துகள்களின் வீரியம் எவ்வளவு இருக்கும்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

எறும்பு சிறுத்தாலும் சக்தி குன்றாது

புட்கள் ஆடிப்பாடி அகமகிழ்கின்றன

நீல வானம் மேகத்தைக் தாங்கியும் தம்பட்டம் அடிக்கவில்லை

நீ ஒரூவன் மட்டும் நான் செய்தேன் என்கிறாய்

இயற்கை உனக்கு செய்யாததா நீ செய்யப் போகிறாய்

என் இனிய நண்பன் கூறினான்

வாழ்க்கையில் எல்லாம் கடந்து விடும்

மறக்காதே அதை மறக்காதே

முடியாவிட்டால் தொலைவி்ல் நின்று விடு

ஜன்னல் காற்றை உள்ளே விட்டு உயிரை வளர்க்கிறது

அதுபோல் முடிந்தால் வளர்த்திடு, அழித்திடாதே

எதையும் பார் பார்திடத்தான் ஜன்னல்.

எழுதியவர் : ரமணி (30-Aug-14, 12:09 pm)
பார்வை : 87

மேலே