சாமி போட்ட முடிச்சு

உள்ளுக்குள் இருக்கும் உள்ளத்தின் வலி
நினைத்திடும் போது நெருப்பாய் சுடுதே.......
கனவுக்குள் இருக்கும் கண்ணாடி வாழ்க்கை
கலைந்திடும் போது நொருங்குது மனதே...
நெஞ்சுக்குள்ளே துன்பத்தை பூட்டிதான் வைக்கிறேன்
ஒரு சொல் பட்டு உடைந்துதான் போகுதே...
கண்கள் இரண்டும் கலங்கியே நிற்கிறேன்
ஒன்னும் புரியாமல் உள்ளுக்குள்ளே அழுகிறேன்....
உள்ளுக்குள் இருக்கும் உள்ளத்தின் வலி
நினைத்திடும் போது நெருப்பாய் சுடுதே......
சோதனையோ இராட்டினமாய் என்னைச் சுற்றி ஆடுதே
இறுதியிலே வேதனையில் சுழன்று வந்து நிக்குதே...
புள்ளி வைத்து வரைந்த கோலமும்
கண்ணீர் மழையில் கலைந்து போகுதே...
முகம் தொட்டு போன தென்றலும்
மூச்சு திணற முகத்தில் வீசுதே...
வாழ வந்த வீடு இங்கே
வாசலுக்கு வெளியே விரட்ட நினைக்குதே...
வாழ்ந்து வந்த வீடு அங்கே
என் வாசனையே நினைச்சு தவிக்குதே...
சிலேந்தி வலையாய் சூழ்ச்சி நடக்குதே
கலைக்க கால்கள் வழியும் தேடுதே...
காலடி எடுத்து வைக்கும் முன்னமே
கால் நரம்பு தேய்ந்திட உணர்ந்தேன்....
கண்கள் இரண்டும் கலங்கியே நிற்கிறேன்
ஒன்னும் புரியாமல் உள்ளுக்குள்ளே அழுகிறேன்.........
உள்ளுக்குள் இருக்கும் உள்ளத்தின் வலி
நினைத்திடும் போது நெருப்பாய் சுடுதே......
வேதனைகளோ வளர் பிறையாய் வந்து வளர்ந்தது
தேய்வின் முடிவிலே இருளும் என்னை சூழ்ந்தது...
இன்பம் வாழ்வில் தொலைந்து போனது
துன்பமோ வாழ்வை சுற்றி வந்தது...
மனக் கண்ணிலே வேலும் பாய்ந்தது
ஆறும் முன்னமே தீயிலே வெந்தது...
வீட்டின் உள்ளே ஜவ்வாது இருந்தும்
சிறை வாசம் விடாது இழுக்குது...
பூவின் நடுவிலே தேனாய் இருந்தும்
உதிரும் தருணத்தில் இதயம் வலிக்குது...
பாசமான உறவின் உள்ளமோ
பூக்கும் வண்ண பூக்களின் இருப்பிடமென அறிந்தேன்...
மோசம் செய்யும் உறவின் உள்ளமோ
நெஞ்சில் குத்தும் முள்ளென உணர்ந்தேன்...
கண்கள் இரண்டும் கலங்கியே நிற்கிறேன்
ஒன்னும் புரியாமல் உள்ளுக்குள்ளே அழுகிறேன்.......
உள்ளுக்குள் இருக்கும் உள்ளத்தின் வலி
நினைத்திடும் போது நெருப்பாய் சுடுதே.......

எழுதியவர் : இதயம் விஜய் (29-Aug-14, 10:46 am)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : saami potta mudichu
பார்வை : 121

மேலே