கூட்டல் கழித்தல் பெருக்கல்
பட்டாம் பூச்சி மாணவர்காள்
பள்ளி செல்லும் மாணவர்காள்
தாத்தா சொல்கிறேன் கேளுங்கள்!
சுவரின்றி சித்திரம் உண்டா
உடல் உறுதி நன்கு போற்றிடவே
சத்தான உணவு உண்ணுதல் வேண்டும்
உடம்பை நன்கு பேணிடவே தினம்
உடற்பயிற்சி செய்தல் வேண்டும்
மனதில் திடம் வேண்டும் நீ
நல்லவவை நாடி பழகுதல் வேண்டும்
தீயவை தீங்கென்று விலகிடல் வேண்டும்
பெரியோர் கூறும் அறிவுரை யாவும்
புரிந்தே நன்கு நடந்திட வேண்டும்
மனம் நிலைத்து பாடங்கள் படித்தலும்
கசடற தெளிந்து தேறலும் வேண்டும்
காலத்தை பொன்னென போற்றி நேரத்தே
கடமைகள் நிறை வேற்றிடல் வேணடும்
நேரத்தின் அருமையை நன்கு உணர்ந்தே
காலம் தவறாமை பழகிடல் வேண்டும்
காலை எழுதல் மாலை விளையாட்டு
ஆழ்ந்த உறக்கம் அவசியம் வேண்டும்
வெற்றி பெற்றோர் எல்லோர் பின்னும்
கட்டமைப்பான வாழ்க்கை உண்டு நீ
நல்லதை கூட்டி தீயன கழித்து
அறிவை பெறுக்கி வாழ்க்கையை வகு!