விநாயகனேவினை கொடுப்பவனே

பிள்ளையாரப்பா பிள்ளையாரப்பா தொந்தி பிள்ளையாரப்பா -நீ
உருவான கதையை கொஞ்சம் ஊருக்கு சொல்லப்பா ............
பார்வதியின் காவலாய் நீ வாயில் காத்தாயோ?
அந்த தாண்டவனும் வந்து உன் தலையை கொய்தானோ?
பூத கணம் தேடி தந்த யானை முகம் அப்பா
பட்டி தொட்டி பறந்து விரிந்த கணேசன் நீ அப்பா
சைவமும் வைணவமும் சங்கமம் உன்னால் அப்பா
மேல்ஜாதி கீழ்ஜாதி வணங்கும் தெய்வமப்பா
எல்லோரும் வணங்கும்படி உன்னை அமைச்ச தாரப்பா.....
அந்த சங்கதியை கொஞ்சம் நீ எனக்கு சொல்லப்பா.........
போதி மரம் ,அரச மரம் ஒன்னு தானப்பா-அந்த
புத்தரையும் பெயர்த்தெடுத்து வச்சான் உன்னை அப்பா
இந்து மதம் ,தூக்கி நிறுத்த வந்த தெய்வமப்பா-அந்த
உண்மையை நீ ஊருக்கு தான் சொல்லு பிள்ளையாரப்பா ............
பிறந்த நாள் கொண்டாட்டம் படு ஜோர் தானப்பா-நீ
பிறந்த கதை பலஉண்டு எது உண்மை அப்பா ?
சிலையை கரைச்சு சுற்றுசூழல் நாசம் உன்னால் அப்பா
வினை தீர்ப்பவனே உனக்கு தான் போலீஸ் எதுக்கப்பா..............
மக்களுக்கு தேவை ஒரு கொண்டாட்டம் தானப்பா.......
அட,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இன்னைக்கு விநாயகர் சதுர்த்தி அப்பா...........