மணியன் சொல்லுறதைக் கேளு பெண்ணே

கட்டழகுப் பெண்ணே
கேட்டுக்கடி
கொஞ்சம் சொல்லுறதைக் காதுல
போட்டுக்கடி. . .

உன்னைப் பார்த்து தினமும்
சிரிப்பானடி
பின்னால் வத்து நடந்து
தொலைப்பானடி . . .

கால் சட்டைப் பைக்குள்ளே
கையை விட்டு
கள்ளப் பய காட்டுவான்
நல்லா துட்டு . . .

அதைச் சும்மா நீயும்
பார்்த்துப் புட்டு
அது நிசந்தான் என்றும்
நினைச்சி கிட்டு. . .

அவன் சொல்லுறத நீயும்
நம்பாதே
அப்புறம் ஏமாந்து போயி
வெம்பாதே . . .

அவன் அப்பன் ஆத்தா
சேர்த்த பணம்
அதுதானே இப்ப சில
பயலின் குணம் . . .

சொந்தமா வேலை வெட்டி
இல்லாத
அந்த பய உனக்கு வேணாம்
பொல்லாம . . .

கெட்ட நாதாரிப் பயலுக
சக வாசம்
தொட்டால் உனக்கு வரும்
பெரும் தோசம் . . .

நல்லவனை நீயும் தேர்ந்து
எடு
இல்லை பெத்தவங்க கையில
விட்டு விடு . . .

அப்பப்ப வருவேன் நான்
முன்னால
தப்பாம சொல்லுவேன் உனக்கு
தன்னால . . .


குறிப்பு : - செந்தமிழ் நாடென்னும் போதினிலே
பாடலின் சந்தம் சற்று இதற்குப்
பொருந்தும் என நினைக்கிறேன்.
படித்து கருத்தைப் பகரும்படி மணியன்

எழுதியவர் : மல்லி மணியன் (30-Aug-14, 5:21 pm)
பார்வை : 71

மேலே