புதையல் வேட்டை முழுமை அடைந்துவிட்டது
"யாரும் கதைக்க கூடாது , நான் சொல்லும் விதி முறைகளை மீறக் கூடாது" மீறும் பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை" நல்ல தைரியசாலிகள் நான்கு பேர் மட்டும்தான் என்னோடு வரணும்" என்று கூறிய காவி உடை அணிந்த, மந்திர தந்திரங்கள் தெரிந்த அந்த பௌத்த பிக்கு, அவர்கள் நான்கு பேர்களை தெரிவும் செய்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------
அடர்ந்த காட்டுக்குள் ஒரு மைல் தூரம் சென்றார்கள் அந்த ஐவரும், பௌத்த பிக்கு மட்டும் தனது செம்மஞ்சள் காவி உடையெய் சுற்றி இருக்கக் கட்டியவாறே , கால் முன்னம் விரல் குந்திய படி ஓர் சிறு கட்பாரைக்கு முன் அமர்ந்து, அந்த கட்பாரயினில் ஏதோ தேடினார்............
பிறகு அந்த கட்பாரைக்கு மேல், கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலினை திறந்து ஊற்றினார். பிறகு ஒரு பகுதியெய் கையால் தேய்த்துக்கொண்டு தண்ணிரையும் ஊற்றினார். அந்தப் பகுதியினில் மங்கலாக தெரிந்தும் தெரியாமலும் ஒரு உருவம் செதுக்கப் பட்டிருந்தது.........
பிறகு தன் கையிலிருந்த ஒலச்சுவடியெய் பார்த்துவிட்டு தலையெய் அசைத்து (இறுமாப்பு பார்வையுடன்) "வெடெ ஹரி வகே " என்று சிங்கள மொழியில் ( விடயம் சரி போல் இருக்கிறது) என்று கூற கூட வந்த நால்வரும் உசாராக ஆரம்பித்தார்கள்.......
----------------------------------------------------------------------------------------------------------------------
மீன் வடிவில் இருந்த அடையாளம் புதையல் இருப்பதற்கான முதல் அறிகுறியாகும்.
பின் இன்னும் கொஞ்ச தூரம் நடந்திருக்க வாய்ப்பில்லை, அங்கேயும் ஒரு கற்பாறை அதிலும் இதுபோல் ஒரு கத்தி போன்ற (வால்) அடையாளம் ,
தொடர்ந்து ஒரு கற்பாறை அதிலே (சில மேல் படிக்கட்டுகள் அடையாளம்)
பின்பு மாந்த்ரீக பிக்கு தொடர்ந்து இருக்கும் பெரிய மலையில் ஏறினார். அதன் மலை உச்சியிலே ஒரு சதுர வடிவில் கோடாக செதுக்கப்ப் பட்டு நடுவில் நீள் வட்ட வடிவு துளை இடப்பட்டிருந்தது.
சுற்றி இருந்த நால்வரும் முக கூர்மையுடன் இது என்னவாக இருக்கும் என்று யோசித்து முடிவதற்குள் ;
"பிக்கு ; சொன்னார் இந்த மலைக்குப் பின்னால் சதுர வடிவில் ஒரு குளம் இருக்கும் அதையும் நாம் கடந்து போகணும்." என்றதும் .மெய் சிலிர்த்து போனார்கள் அந்த நால்வரும்.
மிகவும் களைப்பு தோய்ந்த ஐவரும் மெதுவாக அந்த பெரிய மழையினால் இறங்கியதுடன்,
ஒரு சதுர வடிவான குளம் நீர்வற்றிய நிலைமையில் நடுவில் , கொஞ்சம் பாசிகள் , புதர்கள் நிறைந்த வண்ணம் காணப்பட்டது.
குளத்தின் ஓரமெங்கும் பெரிய கற்களால் எல்லையும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு ஓரத்தில் குலக் காவலுக்காக போட்டிருந்த நாகப்பாம்பு செதுக்கிய கல்லும் மிகவும் துல்லியமாக தெரிந்தது.
பிக்கும், நாகச்சிலையின் அருகாமில் இருக்கும் படிக்கட்டினால் ஏறி..பல வருடங்களாக கம்பீரத்துடன் நின்று கொண்டிருத்த அகன்ற வேர்களை கொண்ட அந்த ஆலமரத்துக்கு அருகாமைக்குச் சென்று ஒரு கணம் அண்ணாந்து பார்த்துவிட்டு ஒரு முறை ஆலமரத்தை சுற்றி வந்தார்.
பின்புறமாக, இருப்புச் சிலையாக வடிவமைக்கப்பட்ட புத்தர் சிலையும் அதன் முன், மண்ணுக்குள் ஒரு புறம் உடும்புக் குழி போல் துளை போடப்பட்ட, நீள் சதுர வடிவில் உள்ள பராங் கல்லும் ; மண்ணுக்குள் ,இலைமறையாய் இருந்தது.
அதையும் பிக்கு, கண்டுகொள்ளத் தவறவில்லை.
பின் ஒரு சிறிய மரக் குச்சி ஒன்றை எடுத்து, கண்ணுக்கு தென்படக்கூடிய பாரங்கல்லின் ஓரமாக சதுர அளவில் அடையாளமிட்டு, வந்த நால்வரையும் தொண்டச்சொன்னார். பிறகு பிக்கு அந்த ஆழ மரத்தின் பின்னால் கொண்டு வந்த மாந்த்ரீக பொருட்களை வைத்து பூஜைக்கு ஆயத்தமானார்.
பூஜை துவங்க முன் "இங்கு சில மாற்றங்கள் நடக்கலாம் யாரும் பயந்து ஓடக்கூடாது, காரியத்தை நிறுத்தக் கூடாது. அப்படியே பயமாக இருந்தால் என் பின்னால் வந்து அமருங்கள் என்றார் பிக்கு.
அந்த நால்வரும் இதனை காதில் வாங்கிக்கொண்டு காரியத்தில் மும்முரமாக இறங்கி அந்த பாரங் கல்லை தோண்டி எடுப்பதில் படு பிசியானார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
நால்வரும் சரமாரியாக தோண்டும் சத்தமும் , பௌத்த பிக்குவின் மாந்த்ரீக வசனங்களும் அந்த இடத்தை ஒரு இனம் புரியாத திகிலுக்கு கொண்டு வந்திட,
அவர்கள் அந்த கல்லை முழுமையாக தோண்டி எடுக்க இன்னும் சில விநாடிகள்தான் ... பாகி !!!
பலத்த காற்றும், நடு நிஷி அகோர மிருகங்களின் சப்தமும்,
ஏதோ அருகிலே ஒரு ஷக்தி நம்மை தாக்கிட முனைகிறது என்பது மட்டும் அந்த நால்வருக்கும் உறுதியானது . நான்கு பெரும் ஒருகணம் காரியத்தை நிறுத்தி அப்படியே திகைத்தவர்களாக !
ஆழ மரத்தின் பின்னால் பூஜையில் இருந்த பிக்குவை நோக்கி வந்தவுடன் அந்த நால்வருக்கும் ஒரு அதிர்ச்சி ..........காத்துக்கொண்டிருந்தது.............
பிக்குவின் முன்னிலையில் ! ராஜ நாகம் என்றழைக்கும் பெரியதொரு இராட்சத நாகப்பாம்பு, தனது இரண்டு நாக்குகளையும் வெளியே நீட்டியவாறு அந்த ஆலமரத்தில் இருந்து பிக்குவின் முன்னாள் வாயெய் பிளந்தவாறு வர , நால்வரும் பிக்குவின் பின்னால் பயந்து தஞ்சம் புகுந்தார்கள் .
பூஜையில் கண்களை மூடி மந்திரங்களை விலாசித்துக்கொண்டிருந்த பிக்கு.. திடீரென கண்களை திறந்து......, முன் பூஜையில் இருக்கும் எதோ ஒரு மூன்று சுண்டுக் கற்களை முன்னும் .......இடதும், ..........வலப்புறமாகவும்...... வீசினார். மறு கணமே ..........அந்த இராட்சத பாம்பு மாயமாக மறைந்தது. அகோர சத்தங்களும் நீங்கியது.
உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கும் நால்வரின் முகத்தை பார்த்து,
பிக்கு ; நெற்றிக் கண் கோவத்துடன் " முட்டாள்களா .......!
போய் காரியத்தை முடிங்க " பயப்படாதீங்க " பயப்பட்டால் உங்கள் உயிருக்குதான் ஆபத்து...... " போங்க சீக்கிரமாக முடிங்க " இததான் நான் முதல்லே சொன்னேன் .......... எதையும் பார்க்காதீங்க, உங்க வேலைய மட்டும் செய்ங்க போங்க" என்று கண்டித்து கூறவே ,....!,
மறுபெடியும் , கற்பாறையின் மேல் கை வெய்ததும் தான் தாமதம் ! .........அதனுள்ளே இருந்து ! ....
பயங்கர சிரிப்பொலியுடன் "இரத்த பலி வேண்டும், ... உயிர் பலி வேண்டும் ..ம் .ம்...ம்.. என்று கர்ச்சிக்கும் சத்தம் கேட்கவே ........அவர்கள் நால்வரும் பீதியினால் கூனிக் குறுகி பிக்குவை பார்க்கவே ,, அவர் திடீர் என பூஜையினால் எழுந்து தாம் கொண்டுவந்த ஒரு சாக்குக் கோனியினால்....., சேவல் ஒன்றை எடுத்து கழுத்தை துண்டித்து இரத்தங்கள் கொட்டிவாறே,,, அந்தக் குழியினுள் இட்டார். பிறகு அந்த சத்தம் அடங்கியது.
பிறகு பிக்கு; "அந்தக் கல்லை அகற்றுங்கள் சீக்கிரம்.......... என்றார் ,
" நால்வரும் பெரும் முயற்சியோடு கல்லை அகற்ற !
உள்ளேயிருந்து பெரும் ஒரு புகைப்படலம் வெளிப்பட்டது. அந்தப் புகை, அருகே யார் இருக்கிறார் என்பதைக் கூட அறியாத வண்ணம், எம்மை சூழ்ந்து கொண்டது.
பிறகு அந்த புகை மூட்டத்தின் நடுவே, தலைகளும் பின் உடல்களும் மேக கூட்டத்தில், தெரிந்துபின்மறையும் , நிலா போல தென்பட்டு மறைந்தன.
உரத்த குரலில் ! "பிக்கு என்னை காப்பாற்றுங்கள் ...! "என்று நான்கு பேரில் ஒருவன் கத்த,
இன்னொருவன் இரு நிமிடத்தில், "என்னை கத்தியால் யாரோ குத்தி விட்டான்...
என்னை காப்பாத்துங்க பிக்குவே" .... மறு முனையில் ஓலமிட, .
.யாரோ என் கழுத்தை நெருக்கிறான் பிக்குவே...காப்பாத்துங்க என்னைய ... என்று சத்தமிட..........
கும்.... புகைக்குள் என்ன நடக்கிறது என்பது மர்மத்தின் உச்ச கட்டமாக இருந்தது. இப்படி அரை மணி நேர திண்டாட்டத்தின் பின் ........புகை தணிந்தது.
வந்த நான்கு பேர்களில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். ஒருவர் கத்தியால் குத்தப்பட்டும், இன்னொருவர் கழுத்து உடைக்கப் பட்டும், இன்னொருவர் அந்த புதையல் குழிக்குள் கழுத்து வெட்டப்பட்ட, சேவலுக்கு நிகராக இரத்த வெள்ளத்தில் இருந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------
ஒரு நீண்ட அமைதிக்குப் பின் ...................................
என்னாச்சு !!! என்ற கண்ணோட்டத்தில்.......... ,நான்காமவன் ; இரத்த கோலத்தில், அவனருகே .... இரத்தக் கரையுடன் ...புதையல் குழி ஆயுதங்கள் ஆங்காங்கே சிதறியபடி ........ஆலமரத்தில் சாய்ந்தவனாக , பயந்தவனாக ,, பிக்குவை தேடினான் ...
பிக்கு வந்த வழியே .....குளக்கட்டை எல்லையெய் கடந்தவராக, போய்க் கொண்டிருதார்.
அவர் கையில் தொல்ப்பைகளும் , இன்னும் சில தங்கச்சிலை போல் அரசர் காலத்து பெறுமதி மிக்க சிலைகளும் ,......இன்னும் சில ..............!!! அவனுக்கு மங்கலாக தூரத்தில் தெரியவே ....விபரம் புரிந்தது.
எங்களை பலி கடாவாக மாற்றி , பிக்கு புதையல் எல்லாத்தையும் ஆட்டய போட்டுவிட்டார் . இருந்தாலும் நான் எப்படி தப்பியது . ? என்று எண்ணிக்கொண்டே பயங்கர கோவத்துடன் பிக்குவை நோக்கி ஓடினான் நான்கமவன் .......
பிக்குவும் பின் பார்க்காமல் விரண்டோட இவனும் பின்னாலே துரத்தினான்...
ஒரு கட்டத்தில் பிக்கு ஒரேயடியாக ! ..திரும்பி நின்று, சரமாரியாக சிரித்தார் ....
பின் துரத்தி வந்தவன் பயந்தவனாக , மூச்சிளைத்தவனாக.......... பிக்குவே ....! அங்கே என்ன நடந்தது ,? ஏன் எங்களை எமாதிநீங்க ? எங்களுக்கும் பங்கு தருவேன் என்று சொல்லி தானே கூட்டிகிட்டு வந்தீங்க ?
ஏன் அவர்களை கொண்டீங்க , நான் மட்டும் தப்பியது எப்படி என்று " ? குழப்பத்திலும், ஆத்திரத்திலும், பயத்திலும் கேட்டான் அவன் ..............
பௌத்த பிக்குவும் , " இந்தப் புதயலைப் பார்............ ! என்று சொல்லி தனித் தங்கத்தினால் செய்த புத்தர் சிலைகள் , தொல்பைகள் நிறைய தங்க வெள்ளிக் காசுகள் , பெறுமதியான ரத்தினங்கள்.. பெறுமதி தெரியாத முத்துக்கள்.. வைரத்தினால் கல் பதிக்கப்பட்ட அரசர் காலத்து வால், (அரசர் காலத்து கிரீடம் தனி தங்கத்தினால்............... நிறைவாகவே இருந்தது ...)
பிக்கு தொடர்ந்து ........" இவைகளை கூட வந்த அல்லக்கை உங்களுக்கு நான் பங்கு தரனுமா.......... ? , இதுக்குத்தான் ஐந்து வருடமா இதேத் தேடி படிச்சனா.... ? இப்போ களத்துல இறங்கினது உங்களுக்கு இலேசா இத தருவதற்கா ...........?
முடிவா சொல்லப் போனால், உங்கள் நான்கு பேரையும் கொண்டு வந்ததே இந்த புதையலுக்கு இரையாக்குவதட்குதான் முட்டாள்களா ... ? அரக்கன் போல கர்ச்சித்து .....பேசினான் . அவன் வார்த்தையிலும் பார்வையிலும் இரத்த வாடை வீசியது. இறுதியாக அவனை பார்த்துக் கேட்டான் .. இந்த புதையலின் விபரம் தெரியுமா ........? நீ எப்படி தப்பினாய் என்று தெரியுமா ............? என்று கேட்கவே ? ....... பிக்கு வீம்புப் பார்வையுடன் கூற ஆரம்பித்தான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை ஆண்ட அரசர்களின் நிறைய பேர் , இலங்கை நாட்டை ஒரு அடைக்கல தீவாகவே கருதினார்கள் . குறுகிய காலம் அடைக்கலம் புகுந்த அரசர்கள் , இப்படி தனது பெறுமதியான பொருட்களை யார் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் புதைத்து வைப்பது வழக்கம் .
இருந்தாலும் மறு முறை இங்கு வந்துவிட நேர்ந்தால் எப்படி பெறுவது....! என்ற நோக்கோடு இப்படி குறியீடுகள் இட்டு அந்த ஓலைச்சுவடிகளையும் மறைத்து வைப்பார்கள்..
புதையலுக்கு காவலாக சில பூத ஏவல்கள் ! சில மந்திரங்கள்! ராஜ நாகங்கள்,
என்பதுடன்
(கடைசியாக புதையல் தெரிந்த அந்த அரசரோடு சென்ற நபரை பார்த்து" இவைகளெல்லாம் உனக்குத்தான் நீ இதனை பாதுகாப்பீராக " என்று சொன்னதும் அவன் பேரானந்தத்துடன் இவைகள் எல்லாம் எனக்கா ??? என்று கேட்ட மாத்திரமே அவன் கழுத்தை அப்படியே வெட்டி அவன் ஆத்மாவை இந்த புதையலுக்கு காவலாக மாத்துவார்கள்") பிறகு இந்த புதையலை எப்படி பலி கொடுத்து எடுக்க வேண்டும் என்ற விபரத்தையும் ஓலைச்சுவடிகளில் குறித்து வைப்பார்கள் .
அது போல் ஒரு பலி கொடுக்கும் புதயலைதான் நாம் இப்போது எடுத்தோம்....
அந்தப் புதையலுக்கு மனித பலி நான்கு கொடுக்கணும் . மிருக பலி ஒன்று கொடுக்கணும் ... என்று ஓலைச்சுவடி மர்மங்களை வித்தியாசமாக சொல்லி முடித்தார் பிக்கு ..
அப்போ ....! அவன் கேட்டான் ? அப்போ அங்கிருந்த 03 பேரையும் கொண்டது நீதானா ? பூதமில்லையா ? பிக்கு வேடிச்சிருப்புடன் சொன்னார் ...
"இது போன்ற பல புதையல்களை எடுத்தும் இருக்கிறேன் பலி கொடுத்தும் இருக்கிறேன் ..உன்னை விட்டு வைத்திருப்பது இறுதி பலிக்காக ..எப்போ ?எப்படி என்று நீயும் பார்க்கத்தான் போகிறாய் "... என்று (மரண பலிப் பார்வையுடன்))...கூறியதுமே ..
தட்டுத்தடுமாறிய அவன்; புதையல் ஆசை எப்படிப் போனாலும் தனது உயிரை காத்துக்கொள்ள காட்டினை துளைத்த வண்ணம் வெறிபிடித்த யானை போல் ஓடினான் அங்குமிங்குமாக..........
" உனக்கு சாவு நிச்சயம் அது உன்னை பலி எடுக்காமல் விடாது டா" அவன் நாவுகளில் விழும்படி கத்தினார் பிக்கு.
ஏனென்றால் பிக்குவுக்கு மட்டும்தான் தெரியும்...................
------------------------------------------------------------------------------------------------------------------
அந்த புதையல் ஆத்மா இவன் உடம்புள்ள புகுந்து தான் அத்தனை பேரையும் பலி எடுத்தது என்று. ........
இவனும் கொஞ்ச நேரத்தில் சாகப் போகிறான் . நாமும் இந்த இடத்தில நிற்பது அபாயகரமானது .................எண்ணியவாறே புதயல்களுடன் காட்டின் குறுக்குப் பாதையில் மாயமாக மறைந்தார் அந்த பௌத்த மாந்த்ரீக பிக்கு.
--------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் ! செய்தியில்
----------------------------------------
புதையல் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் இனந்தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டுள்ளனர் .
அதில் இரண்டு பேர் கூறிய ஆயுதங்களால் குத்தப்பட்டும்
ஒருவர் கழுத்தருக்கப்பட்டும் மற்றவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஆலமரத்த்தில் தூகிலப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் விடயம் மர்மமாகவே உள்ளது . பொலிசார் தீவிர விசாரணை .
*************************************************************************************************************
முற்றும்
முக்கிய குறிப்பு
*************************************************************************************************************** :- இலங்கையில் இது போன்ற பல நூறு புதையல்கள் எடுக்கப்பட்டுகொண்டும் , சூராயடப்பட்டுகொண்டும் தான் இருக்கின்றன. (அதுவும் அபிவிருத்து என்ற பேரில்) .கிராமிய அபிவிருத்தி திட்டம் துவங்குவதே இது போன்ற புதையல் வேட்டைக்காகதான். நடு நிலைமையோடு இது போன்ற புதையல்கள் நாட்டின் வளர்ச்சிப் பயனுக்காக எடுக்கப் படுமேயானால் .. வேறெந்த நாடுகளிடமும் கை எந்த வேண்டிய அவசியம் இருக்காது .ஏனென்றால் அவ்வளவு பெறுமதியான புதையல்கள் இந்த நாட்டில் புதைந்திருப்பதாக புதையல் கருத்துக்கணிப்பு சொல்கிறது. இருநதாலும் இவைகள் தனி மனிதன் கையிலும் அரசியல் வாதிகளின் கையிலும் மாட்டுவதே கவலைக்குரிய விடயமாகும். முற்றும்
***********************************************************************
ரிப்னாஸ் - தென்னிலங்கை - திக்குவல்லை