அன்புள்ள நியந்தாவுக்கு 5
7..... 7.30 ஆக போவது புரியாமல் நின்று கொண்டு இருந்தேன்..... புருவத்தை முழுதாக உயரத் தூக்கி.... பின் பாதி இறக்கி... மீண்டும் வலப்புறம் மேல் தூக்கி... முழுதாக இறக்கி.... பின் முகமே சற்று கீழே இறங்கி முடித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றது சிந்தா....
கண நேர யோசனை எனக்கு...
நியந்தாவை சற்று தள்ளி வைத்து விட்டு......
ஓ........ புரிந்து கொண்டேன்..... பைக்கை உள்ளே காம்பௌண்டுக்குள் நிறுத்தி விட்டு, வீட்டுக்குள் வா.... என்று பொருள்.. பொருள் புதிது.... எனக்கு குரலே எழவில்லை..... பயம்.... இன்னும் அதிகரித்தது.... ஒன்று காவல் நிலையத்துக்கு கூட்டி சென்று இருக்க வேண்டும்....இல்லை காசு வாங்கிக் கொண்டு விட்டுருக்க வேண்டும்.. இங்கே இரண்டும் இல்லை....இது என்ன... யார் வீடு இது... போன் பண்ண வேண்டும்... கொலை வேறு குலை நடுங்க வைத்துக் கொண்டே இருந்தது..... புரிந்தும் புரியாத புரியாமை.......... புரிய முற்படவில்லை.... புரியாமல் இருப்பதே சுகம்.. என்பது போல... நடுங்கிக் கொண்டே வீட்டுக்குள் சென்றேன்.... சோபாவில் காய்ந்து கொண்டிருந்தது..........உள்ளாடை ஒன்று....
உற்றுப் பார்க்கும் நேரத்தில்....உறுமலோடு சிந்தா... என்னை முறைத்தது....
வயசு ஒரு 42 இருக்குமா....! உள்ளுக்குள் கரைந்த பயம்.... முகமூடி கழற்றத் தொடங்கியது....
நான் நின்று கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன்.... சிந்தாவைக் காணவில்லை.... ஒன்றும் விளங்க வில்லை.... ஏதாவது கஞ்சா கேசில் மாட்டி விட கூட்டி வந்திருக்குமோ..... விட்டால் அழுது விடும் மனநிலை எனக்கு.... யாருக்கு போன் செய்து உதவி கேட்பது.....
வீடு ஒரு பேச்சிலரின் அறை போல இருந்தது.... அங்காங்கே நைட்டியும் புடவையும்.... அதோடு நிற்கவில்லை..........
சட்டென ஒளிர்ந்தது தொலைகாட்சி....
நான் நன்றி சொல்வேன்.... என் கண்களுக்கு.... உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு... நான் நன்றி சொல்ல சொல்ல நாணம் மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன ?...ஜெய்ஷங்கர்ம் ஜமுனாவும்.. பார்க்கை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க......
உள் அறையில் இருந்து பூச்சூடி.... பொட்டு வைத்து... தலை விரித்து... புடவையில்.... அதுவும் மஞ்சம் புடவையில்.... அப்படி ஒரு சாந்தமான முகத்துடன்.. சிந்தா... கையில் கறுப்புத் தேநீர் டம்பளருடன்.. என் அருகே வந்தது....
எனக்கு.... எனக்கு..... நானே கண்டு பிடித்து ஓடிவிட்டேன்... ரெஸ்ட் ரூம் நோக்கி.....
என் இதயத் துடிப்பை நன்றாக எனக்கு கேட்க முடிந்தது........ இப்போது தான் ஒன்று கவனித்தேன்... வீடே புகை மண்டலமாக இருப்பது போல ஒரு பிம்பம் என மனதெங்கும்.. பனிகளை வெட்டிக் கொண்டிருந்தது....
எனக்கு புரிந்து விட்டது...... இப்போது இந்த வீட்டுக்கு ஒரு போன் வரும்.... ஆனால் போன் ஒயர் அறுந்திருக்கும்.. ஆனாலும் பேச முடியும்.. பேசுவது நியந்தாவாகத்தான் இருக்கும்....!
புடவையை வேட்டியை போல மடித்துக் கட்டிக் கொண்டு என் எதிரே இருந்த சோபாவில் கால் மேல கால் போட்டபடி உட்கார்ந்தது சிந்தா....
கையில் இருந்த டம்ளரை என்னை நோக்கி காட்டி, வேணுமா என்பது போல ஜாடை செய்தது...
நான் வேண்டாம் என்பது போல ஜாடை காட்டி விட்டு, நான் போறேன்.. என்ன எதுக்கு கூட்டிட்டு வந்துருக்கீங்க... நான் ஒரு தப்பும் பண்ணல... நியந்தா.....ட்ட.... பேசத்தான் வந்தேங்க்ரத மட்டும் எடிட் செய்து கொண்டு பேச துணிந்தேன் ...
கபெக்கென டம்ளரில் இருந்த தேநீர் முழுக்க வாய்க்குள் கொட்டிக் கொண்டு சடாரென என் முகத்தில் சர்ரென துப்பியது...... குபுக்கென குமட்டியது எனக்கு...... அது தேநீர் இல்லை.... பிராந்தி.... அதும் எதுவுமே கலக்காத பிராந்தி.....
நான் அன்னிச்சை செயலாய் சட்டென முகத்தை துடைத்தேன்....என் குதி காலில் ஒரு நரம்பு குபுக் குபுக் என்று நடுங்கியதை உணர்ந்தே இருந்தேன்.... "பைத்தியமா..... பேயா....."
மெல்ல காலைப் பார்த்தேன்... பெண்மையின் வசீகரம்........மூச்சிழுக்க வைத்தது.... என்ன மாதிரி சூழல் இது.... என் மூளைக்குள் யாரோ பனிக்கட்டி கொட்டுவது போல...... ஆஸ்துமாவின் பிடியில் சிக்குண்ட மூச்சுக் குழலாய்....ஏங்க ஏங்க ஒரு இடத்தில் நிற்காத பெரு மூச்சு.... பதற வைத்துக் கொண்டிருந்தது.... கொலை செய்ய போகிறதா என்னை....? அயோ இன்னும் நியந்தாவைப் பார்க்கவில்லையே.... அந்த மூக்குத்தி..... அந்த நெல்லிக் கண்கள்.. அந்த கொரிய இதழ்கள்....
பளிங்கினால் ஒரு மாளிகை...... பருவத்தால் மணி மண்டபம்..... உயரத்தில் ஒரு கோபுரம்........
கவனம் கலைத்தது......கிட்டக் காட்சி தொலைகாட்சியில்....
எதிரே..... கன்னம் விரிய பற்கள் தெரிய கண்கள் வெளி வர... என்னையே பார்த்துக் கொண்டு மெல்ல புன்னகை செய்து கொண்டிருந்தது சிந்தா...!!!!
இப்போது கால் மேல் கால் போட்டிருக்கவில்லை....
டெலிபோன் அடித்தது........
கவிஜி.
*நியந்தா தான் போன்ல......