தமிழ்ப் பந்தி
நான்விரும்பிடும் ஒர்மொழி அது
.............. நாவினிக்குமென் தாய்மொழி
தான்திரும்பிடும் காதுகள் தமிழ்
.............. தருங்கவிதையின் ஓசையில்
தேன்கரும்பது போலவே ஒரு
.............. தெளிசுவையினைத் தாருமே
வானுதித்திடும் சூரியன் அது
............... வாழ்வாரைஇது வாழுமே!..
மொழிகளேன்பது ஆயிரம் அதில்
.............. முந்திவந்தது என்மொழி
பழிகளேன்பது இல்லையே தமிழ்ப்
.............. பந்திவைத்தது தன்னையே
வழிகளாயிரம் பாடிட அதில்
.............. வந்திடும்பல நன்மையே
எழில்தருவது யாப்புதான் இதை
............... ஏழுலகமும் வாழ்த்துமே
வானுலகையும் பாடலாம் அதன்
............... வகைதெரிந்துநாம் ஆடலாம்
மானிடரையும் கூட்டலாம் அவர்
............... மனமயக்கமும் ஓட்டலாம்
மேல்நிலையினை எய்யலாம் மொழி
................ மெருகடைந்திட செய்யலாம்
வா!துணைதரும் யாப்புதான் அது
................. வழிதிறந்திடும் நாளுமே ! -அபி மலேசியா