மனைவி ஒரு தேவதை
![](https://eluthu.com/images/loading.gif)
பள்ளித் தோழர்கள் இருவர்
ஆண்டுகள் பலச் சென்றபின்
சந்தித்தனர் ஓர்நாள்
பிரிந்து சென்ற நாட்களில்
சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும்
பகிர்ந்தனர் பாங்குடனே
திருமண வாழ்க்கைச் சரியாக
அமையாத ஒரு நண்பன்
உன்மனைவி எப்படி எனக்கேட்டான்
சட்டென நண்பன் பதிலுரைத்தான்
தன்மனைவி ஒரு தேவதையென்று
கேட்டதும் இவன் வருந்தினான்
நண்பனுக்கு ஆறுதல் சொல்வதாக
எண்ணி நீ கொடுத்துவைத்தவன்
என்மனைவி இன்னும் உயிரோடுயிருக்கிறாளென்றான்
சில நேரங்களில் நாம்என்ன கேட்க
விரும்புக்கின்றோமோ அதுவே நல்லதையே
கேட்டதாக நினைக்க வைக்கிறது