உயிரற்ற உருவம் நான்
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவனே...
உன் வலிகளை-நீ
சொந்தம் கொண்டாடும் போது
என்னிடம் பகிர மனமில்லை...
ஏன்....
நான் உயிரோடு இருப்பதை
மறந்து விட்டாயா...?
இல்லை...
என்னையே மறந்து விட்டாயா...?
உன் மௌனத்திற்கு என்னுள்
எழும் கேள்விகள் ஆயிரம்...
உரிமையாக உரையாட முடியவில்லை
உன்னிடத்தில் உரிமை இருந்தும்...
உன் மௌனத்தால் நான்
உணருவதல்லாம் ...
நான் ஓர் உயிரற்ற
உருவம் என்று மட்டுமே...