நீ நம் காதலை உணரும் நொடி எது

உயிரானவனே...

என்னையும் நம் காதலையும்
நீ உணரும் நிமிடம் எது ?

என் கண்ணீரில் கலந்த
உன் மீது உண்டான அன்பை
நீ முழுமையாக உணரும்
நிமிடம் எது ...?

உன்னில் நான் என
நீ உணர்த்த நிமிடம் எது...?

என்னை கடக்கும்
நிமிடமெல்லாம் -உன்
நினைவுகளுக்கு மட்டுமே சொந்தம்
என நீ உணரும் நிமிடம் எது..?

சொல்..சொல்...சொல்.

என்னை நீ முழுமையாக
உணரும் நிமிடம் - நம்
வாழ்வில் எந்த நிமிடம்
சொல் அன்பே...சொல்...

எழுதியவர் : சகிமுதல்பூ (1-Sep-14, 6:34 pm)
பார்வை : 473

மேலே