என் நிழலாய் வாருங்கள் நட்போடு
அன்பாய் பேசி மனதோடு
ஆழமாய் கலக்க இன்று இல்லை
நம்மில் உறவுகள்
நமக்குள் அத்தனை பிரிவுகள்
பிடித்ததில் ஒற்றுமை
படித்ததில் வேற்றுமை
பழக்கத்தில் நட்பு
மறக்கும் நிலை நடப்பு
நட்பில் வேண்டாமே நடிப்பு
இருந்தால் நிற்கும் என்துடிப்பு
சிரிகை விரிப்போம் வானை தாண்டி
உண்மை நேசம் கொண்டால்
என் நிழலாய் வாருங்கள் நட்போடு

