அழகான வாழ்கை ஆனந்தமாய்
வேண்டிக் கொண்டு வந்ததுமில்லை
வந்த பின்பு உண்டு எல்லை
கல்லைப் போன்ற திண்மம் இருந்தால்
வில்லை வளைத்து வெற்றி காணலாம்
அறம் பொருள் இன்பமுண்டு
வையம் தரும் கொடையுமுண்டு
ஆற்றலுடன் வளங்கள் வளர்த்தால்
பொருளும் கிட்டும் மனமும் மகிழும்
ஈட்டிய பொருளைக் காத்தல் வேண்டும்
ஈரத்தோடு பகிர்ந்திடல் வேண்டும்
மனித நேயம் போற்றிட வேண்டும்
நற்பெயரை நிலைநாட்ட வேண்டும்
நல்லதொரு குடும்பம் செந்தமிழ் நூலகம்
மனைவி மக்கள் சுற்றம் காத்து
கல்வி கேள்விகளனைத்தும் அறிந்து
மாறா இன்பமடைந்திட வேண்டும்
சமூகச் சிந்தனை பெருக்கிட வேண்டும்
சமூகப் பொறுப்பை பொருப்பெனக் கொள்க
நாட்டுப் பொருநனை பாடிட வேண்டும்
நம் தேச மாந்தர்களை உயர்த்திட வேண்டும்
நாடும் வீடுமொன்றெனக் கண்டு
முதியவர் வறியவர்அக்கறைக் காட்டி
உன்னைப் போலே தான் மற்றவருலகில்
யென்பதை யுணர்ந்தால் ஆனந்த வாழ்கை