இடை நிற்கிறது வாழ்க்கை
இடை நிற்கிறது வாழ்க்கை
இருபக்க சுவர்களாய்
நல்லதும் அல்லதும் !
அடையாளம் தெரியாமல்
அகப்பட்டுக் கொண்டோம் !
ஆறாம் சொல்ல ஆட்களில்லை
அடைக்கலம் கேட்டால் அகதிகளாகிறோம் !
அவரவர் வேலைக்கு
அடுத்தவன் உழைப்பு !
கறுப்புப் பணம் காக்க
இருப்புக் கதவு !
ஐந்து நிமிட ஆசை தீர்க்க காதல்
அவனுக்கும், அவளுக்கும் !
அறியாப் பருவம்
அனைத்தும் அறிந்திருக்கிறது !
பிரசவ வலி இல்லாமல் பிள்ளை
பெறுகிறது குப்பைத் தொட்டி !
அன்னையர் தின கொண்டாட்டம்
அடுத்தமுறை அவைகளுக்குத்தான் !
கடைத் தெருக்களில் கற்பு விற்பனை
ஆணுக்கும், பெண்ணுக்கும் !
நாகரீகம் வளர்கிறது விலைவாசிக்கு
பதில் ஆடை குறைகிறது !
மலிவு விலையில் மானம் கிடைக்கிறதாம்
வாங்க மனமில்லை அவமானத்தை
ஆடையக்கிக்கொண்ட ஆட்களுக்கு !
நல்லடக்கம் செய்யக்கூட நால்வர் இல்லாமல்
நடுத்தெருவில் நிற்கிறது நல்லது !
அல்லதெல்லாம் நல்லதானதால் !

