கற்றறிந்தோர் வாய்ச்சொல் கேட்டுச் செய்க நற்கருமம் - ஆசாரக் கோவை 92

தலைஇய நற்கருமஞ் செய்யுங்கா லென்றும்
புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா
அந்தணர்வாய்ச் சொற்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல்
என்றும் பிழைப்ப திலை. 92 ஆசாரக் கோவை

பொருளுரை:

அறிவுடையோர் மேலான நற்செயல்களைச் செய்வதற்கு எப்போதும்
தெளிவு இல்லாதவரிடம் நாள் கேட்டுச் செய்யமாட்டார்.

ஒழுக்கக்கேடு இல்லாத கற்றறிந்தோர் வாய்ச்சொற்படி நாள் கேட்டு
நற்கருமம் செய்யவேண்டும். அவர் வாய் மொழி என்றும் பிழைபடுபவது
இல்லை.

புலையர் - வள்ளுவர், சோதிடம் கூறும் வகுப்பார்.

‘நிலையியைந்த நற்கருமம்' என்றும் பாடம்.

இப்பாடல் இருவிகற்ப நேரிசை வெண்பா ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Sep-14, 1:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 188

சிறந்த கட்டுரைகள்

மேலே