வானம் கேட்கிறது

மரங்களை வெட்டித் தள்ளுகிறாய்
மாளிகைகள் அழகாய் அமைக்கிறாய்
அடுப்பில் எரிக்கிறாய் ;உணவு உண்கிறாய்
வரவேற்பறையில் மேசையும் நாற்காலியுமாக்கி
நண்பர்களை இனிமையுடன் வரவேற்கிறாய் !
காகிதத் தொழிற்சாலைக்கு அனுப்புகிறாய்
வெள்ளைக் காகிதம் செய்து
மரம் வெட்டாதே என்று பொய்யாய்
கவிதை புனைகிறாய் !
வானம் கேட்கிறது !
எனது வரவு ஈர்ப்பிற்கு
மரங்கள் எங்கே ?
-----கவின் சாரலன்

பாரதியின் உக்கிரக முதற் கருத்து :
எரிதழல் கொண்டுவா தம்பி
அண்ணன்
கரத்தினை எரித்திடுவோம் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Sep-14, 10:16 am)
பார்வை : 120

மேலே